மட்ட நிலத்தண்டு

From Wikipedia, the free encyclopedia

மட்ட நிலத்தண்டு
Remove ads

தாவரவியல் மற்றும் மரவியலில் (/ˈraɪzoʊm/, from Ancient Greek: rhízōma "mass of roots", .[1] from rhizóō "cause to strike root")[2] from rhizóō "cause to strike root") மட்ட நிலத்தண்டு என்பது நிலப்பரப்பிற்கு கீழ் காணப்படும் மாறுதலடைந்த ஒரு நிலத்தடித் தண்டாகும், இதன் கணுக்களிலிருந்து வேர்கள் மற்றும் தண்டுகளை உருவாக்குகின்றது. மட்ட நிலத்தண்டு, படரும் வேர்தண்டு மற்றும் வேர்தண்டு என்றும் அழைக்கப்படுகிறது. மட்டநிலத்தண்டுகள் கோணமொட்டுகளிலிருந்து உருவாகுகின்றன. அவை புவிஈர்ப்பு விசைக்கு செங்குத்தாக வளர்கின்றன. மட்ட நிலத்தண்டுகளுக்கு புதிய தண்டுகளை மேல்நோக்கி வளரச்செய்யும் திறனையும் பெற்றுள்ளது.[3]

Thumb
தாமரை மட்டநிலத்தண்டு
Thumb
ஒரு பழைய ஸ்புச் தாவரம்; Euphorbia antiquorum, மட்டநிலத் தண்டை  வெளிவிடுகிறது. omes
Thumb
மஞ்சள் மட்டநிலத்தண்டு மற்றும் மஞ்சள் பொடி
Thumb
கிரோகாஸ்மியா  குமிழ் கிழங்கின் கணுக்களிலிருந்து வளரும் ஓடுமுளைத் தண்டு
Remove ads

உருவாக்கம்

ஒரு மட்ட நிலத்தண்டை எத்தனை துண்டுகளாக பிரிக்கப்பட்டாலும் ஒவ்வொரு துண்டும் ஒரு புதிய தாவரத்தை உருவாக்கும் திறன் பெற்றுள்ளது. எனவே தாவரங்கள் தரசம், புரதம் மற்றும் வேறு ஊட்டசத்துக்களை சேமித்து வைக்க இத்தகைய மட்ட நிலத்தண்டுகளை பயன்டுத்துகின்றன. இந்த ஊட்டசத்துக்கள் புதிய தாவரங்களை உருவாக்கவும் அல்லது குளிர்காலங்களில் தாவரத்தின் தரைமேற்பகுதி மடிந்து போகும் போதும் பயனுள்ளதாய் இருக்கும்.  இது ஒரு வகையான தாவர உடல் இனப்பெருக்க முறையாகும். மேலும் விவசாயிகளும் மற்றும் வேளாண் குடிகளும் சில தாவரங்களை விருத்தி செய்ய இதே முறையை பயன்படுத்துகின்றனர். மூங்கில் மற்றும் கொத்தாக வளரக்கூடிய புற்கள் இவை பக்கவாட்டில் பரவுவதற்கு உதவுகிறது. இவ்வழியில் விருத்தியடையும் தாவரங்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஹாப்ஸ், அஸ்பராகஸ், இஞ்சி, பள்ளத்தாக்கின் லில்லி, சிம்போடியல் ஆர்கிடுகள், மஞ்சள், மற்றும் பிங்கர்ரூட் போன்றவைகளாகும். இத்தகைய மட்ட நிலத்தண்டுகள் நேரடியாக உணவுகள் சமைக்கவும் பயன்படுகின்றன.

Remove ads

வரம்பு

இவ்வாறு சேமித்து வைக்கப்படும் மட்ட நிலத்தண்டுகள் பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுக்கு உட்படுவதனால் மீண்டும் நடவு செய்ய பொருத்தமற்றதாகுவதால் இதன் இருப்பு குறைந்து விடுகிறது. ஆனாலும் திசுவளர்ப்பு முறை மூலம் மட்ட நிலத்தண்டுகளை மீண்டும் செயற்கையாக உருவாக்கலாம். திசு வளர்ப்பு மூலம் எளிதாக மட்ட நிலத்தண்டுகளை பெருமளவு உற்பத்தி செய்யவும், அதிக மகசூலுக்கும் வழிவகுக்கிறது.[4] தாவர ஹார்மோன்களான எலினைன் மற்றும் ஜாஸ்மோனிக் அமிலம் ஆகியவை நிலக்கடலையின் வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் குறிப்பாக வரியாற்றுக்கிழங்கில் (சாரடியசடி) வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவதற்கும் உதவுகிறது. வெளிப்புறமாகப் பயன்படுத்தப்படும் எத்திலீன், உட்புற எத்திலீன் அளவை பாதிக்கும் என கண்டறியப்ட்டது. இது எத்திலீன் செறிவுகளை எளிதாக கையாள்வதற்கு அனுமதிக்கிறது.[5] மட்ட நிலத்தண்டுகளின் வளர்ச்சியைத்; தூண்டுவதற்கு இந்த ஹார்மோன்களைப் பயன்படுத்துவது பற்றிய அறிவுஇ விவசாயிகளுக்கும் உயிரியலாளர்களுக்கும் மட்ட நிலத்தண்டுகளிலிருந்து நல்ல தாவரங்களை எளிதாக உற்பத்தி செய்வதற்கும் , பயிரிட்டு வளர்ப்பதற்கும் உவுகிறது.

ஒரு ஓடுமுளைத்தண்டு மட்ட நிலத்தண்டுடன் ஒத்திருக்கிறது. ஆனால் மட்ட நிலதண்டைப் போலல்லாமல் இது தாவரத்தின் முதன்மை தண்டாகிறது. ஓடுமுளைத்தண்டு ஏற்கனவேயுள்ள தண்டிலிருந்து முளைக்கிறது. இவை ஸ்டிராபெரி தாவரத்தில் உள்ளது போல் நீண்ட கணுவிடைப் பகுதியையும்இ முனையில் புதிய தண்டினையும் பெற்றிருக்ககும். பொதுவாக மட்ட நிலத்தண்டுகள் குறுகிய கணுவிடைப் பகுதியை ககணுக்களிலிருந்து மேல் நோக்கி வளரும் தண்டுகளையும் உருவாக்குகின்றன. தண்டு கிழங்கு என்பது ஒரு மட்ட நிலத்தண்டின் அல்லது ஒரு ஓடுமுளைத்தண்டின் தடித்தப் பகுதியாகும். இது சேமிப்பு உறுப்பாகப் பயன் படுகிறது.[6] பொதுவாக கிழங்கில் தரசம் அதிகமாக இருக்கும். உதாரணமாக உருளைக்கிழங்குஇ இது ஒரு மாற்றுருவடைந்த ஓடுமுளைத்தண்டு. கிழங்கு என்னும் சொல் பொதுவாக துல்லியமில்லாதது மற்றும் சில நேரங்களில் மட்ட நிலத்தண்டுடன் உள்ள தாவரங்களுக்குப் பயன் படுத்தப்படுகிறது. 

Remove ads

வகைகள்

சில தாவரங்களில் மட்ட நிலத்தண்டு தரையின் மேலே வளரும் அல்லது மண்ணின் மேற்பரப்பில் இருக்கும். சில ஜரிஸ் சிற்றினங்கள் மற்றும் பெரணிகளில் உள்ள படரும் தண்டுகள் மட்ட நிலத்தண்டுகள் ஆகும். இஞ்சி, மூங்கில், வீனஸ் ஃபிளைடிராப், சைனிஸ் லேந்தர்ன், வெஸ்டர்ன் பாஸ்சன், ஓக், [7] ஹோப்ஸ் மற்றும் அல்ஸ்ரோமிரியா மற்றும் களைகளாகிய ஜாண்சன் புல்இ பெர்முடா புல் மற்றும் பர்பிஸ் நட் செட்ஸ் போன்ற தாவரங்களில் மட்ட நிலத்தண்டுகள் பொதுவாக ஓர் அடுக்கானவை, ஆனால் ஜெயன்ட்ஹார்ஸ்டெயிலில் பல அடுக்குகளாக இருக்கும்.[8]

பல மட்டநிலத்தண்டுகள் சமையலுக்கு பயன்படுபவை, மற்றும் சில ஜி-ஜெர்கென்(zhe'ergen ) போன்றவை சமைக்காமலேயே உண்ணலாம்.[9]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads