மணா, இந்தியா

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மணா (Mana) என்பது இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். தேசிய நெடுஞ்சாலை 58 இன் வடக்கு முனையில் [1] மணா கிராமம் 3,200 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது[2]. இந்தியா மற்றும் திபெத் எல்லையில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் மணா கணவாய் தொடங்குவதற்கு முன்பு அப்பாதையில் கடைசியாக இடம்பெற்றுள்ள கிராமம் மணா கிராமம் ஆகும். மேலும், இந்துகளின் புனித நகரான பத்ரிநாத் இங்கிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது மற்றும் இவ்விரு இடங்களும் பாரம்பரிய கலாச்சாரத்தில் இரண்டறக் கலந்துள்ளன.

விரைவான உண்மைகள் மணாMana, நாடு ...
Remove ads

மக்கள் தொகை

இக்கிராமத்தில் 558 குடும்பங்களில் 1214 நபர்கள் வசிப்பதாக 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது[3]. இம்மக்கள் மார்ச்சா மற்றும் சாட் அல்லது போட்டியாசு இனத்தை சேர்ந்தவர்கள். குளிர் காலங்களில் இப்பகுதி முழுவதும் பனியால் மூடப்பட்டு விடுவதால் மொத்த மக்கள் தொகையும் கீழே தாழ்வான பகுதிகளுக்கு வந்துவிடுகின்றனர்[2]. இந்திய எல்லையில் தங்கள் கடைதான் கடைசி தேனீர் கடை என்று இங்குள்ள பல தேனீர் கடையினர் மக்களிடம் கூறுவார்கள் [4].

Remove ads

கலாச்சார அடையாளம்

இக்கிராமத்தில் வசிக்கும் மக்கள் பத்ரிநாத் கோயிலுடன் கலாச்சாரப் பிணைப்பு கொண்டவர்கள் ஆவர். முற்காலத்தில் இவர்கள் திபெத்துடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தனர், சுற்றுலா பயணிகள் அதிக அளவில் மணாவிலுள்ள வியாசு கஃபா எனப்பெயரிடப்பட்ட சிறிய குகையை காண வருகின்றனர். மாமுனி வியாசர் இக்குகையில் அமர்ந்துதான் மகாபாரதம் பாடியதாக நம்பப்படுகிறது [2]. இக்குகையைத் தவிர கணேசு கஃபா என்ற பெயரில் மற்றொரு குகையும் இங்கு உள்ளது. சுற்றுலாப் பயணிகள் இவ்விரு குகைகளையும் காண்பதற்கு பெரும்பாலும் இங்கு வருகின்றனர்.

Remove ads

பிற சுற்றுலா இடங்கள்

வசுதரா நீர்வீழ்ச்சி, சடோபந்த் ஏரி, பிம் புல் போன்ற பல இடங்கள் மணாவிற்கு அருகில் உள்ளன.

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads