மணிப்பூர் மாநில காங்கிரசு கட்சி

இந்திய அரசியல் கட்சி From Wikipedia, the free encyclopedia

மணிப்பூர் மாநில காங்கிரசு கட்சி
Remove ads

மணிப்பூர் மாநில காங்கிரசு கட்சி (Manipur State Congress Party) என்பது இந்தியாவின், மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் அரசியல் கட்சியாகும். இக்கட்சியானது 1997 ஆம் ஆண்டு வாக்பம்பம் நிபமாச்சா சிங் என்பவரால் தொடங்கப்பட்டது. முன்னாள் சபாநாயகரான நிப்பமச்சாவின் தலைமையிலான அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு ஆளும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து பிரிந்து இக்கட்சியைத் துவக்கியது. இக்கட்சியானது அடுத்த அரசாங்கத்தை உருவாக்கியது.[2] விவசாயி பயிரை அறுவடை செய்வது இக்கட்சியின் தேர்தல் சின்னமாகும்.[3] இக்கட்சியை உருவாக்கிய நிபமாச்சா சிங் 16 திசம்பர் 1997 ஆம் ஆண்டு முதல்வராகப் பதவியேற்றார். 1999 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் சாபா சிங் என்பவர் இக்கட்சியின் சார்பாக போட்டியிட்டு, அடல் பிகாரி வாச்பாய் பிரதமராக பதவி வகித்த காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய அமைச்சர் ஆனார்.

விரைவான உண்மைகள் மணிப்பூர் மாநில காங்கிரசு கட்சி, நிறுவனர் ...
Remove ads

காங்கிரசுடன் இணைப்பு

ஏப்ரல் 4, 2014 ஆம் ஆண்டு மணிப்பூர் மாநில காங்கிரஸ் கட்சி காங்கிரஸ் உடன் இணைத்தது.[4] இக்கட்சியில் கடைசியாக தலைவர் பதவி வகித்தவர் வி.மணி சிங் ஆவார்.[4]

போட்டியிட்ட தேர்தல்கள்

மணிப்பூரில் 2002 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், இக்கட்சி 60 இடங்களில் 42 இடங்களில் போட்டியிட்டு ஏழு இடங்களை மட்டுமே வென்றது. இவர்களில் ஐந்து பேர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர். பின்னர் 2007 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில், இக்கட்சி 6 இடங்களில் போட்டியிட்டது, ஆனால் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்தது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads