மணிமங்கலம் போர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மணிமங்கலப் போர் என்பது பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே, தற்கால காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள் மணிமங்கலம் என்ற ஊரில் கிபி 640 இல் நடைபெற்றது. இப்போரில் சாளுக்கியர்களுக்கு எதிரான பல்லவர்களுக்கான முதல் வெற்றியாகும். மேலும் இரண்டாம் புலிகேசியிடம் பெற்ற நான்கு தோல்விகளுக்குப் பின் பல்லவர்களின் முதலாவது வெற்றியாகும்.

காரணங்கள்

கி.பி.630 ல் முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் பல்லவர்கள் வலிமை பெறத் தொடங்கினர். பல்லவர்களின் எழுச்சியைக் கட்டுபடுத்த  இரண்டாம் புலிகேசி தெற்கு நோக்கி படைநடத்தி செல்லும் வழியில் பாணர்களைத் தோற்கடித்து தொற்கின்மீதான தொடர் படையெடுப்புகளை நடத்தினார்.[1] தற்போது மணிமங்கலம் என்ற அழைக்கக்கூடிய மணிமங்கல என்ற இந்நகரம் பல்லவர்களின் தலைநகராக காஞ்சிக்கு 20 மைல் தொலைவில் உள்ளது. இங்கு பல்லவ படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.[2]

Remove ads

நிகழ்வுகள்

இப்போரில் இரண்டாம் புலிகேசி தோல்வி அடைந்து, பல்லவ படைகளால் பின்வாங்கவேண்டி ஆனதாகவும் கூரம் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.[2]

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads