மண்டபம்

From Wikipedia, the free encyclopedia

மண்டபம்
Remove ads

இந்திய கட்டிடக்கலையில் மண்டபம் என்பது தூண்களுடன் கூடிய வெளிப்புற அறை அல்லது காட்சிக்கூடம், பொது மக்கள் சடங்குகள் செய்ய கூடும் ஒரு இடம் என இந்திய இலக்கியங்களில் வரையறுக்கப்பட்டுள்ளது.[1]

Thumb
அமிர்தபுரத்திலுள்ள ஒரு திறந்த மண்டபம்

கோவில் கட்டிடக்கலை

Thumb
முகப்பு மண்டபம், ஷிமோகா
Thumb
பெரிய மணி போன்ற வடிவம் கொண்ட மண்டபம் ஒடிசா

இந்து கோவில்களில் மண்டபம் என்பது நுழைவாயில் ஆகும். மணடபங்கள் கோபுரத்தின் வழியாக கோயிலுக்குள் நுழையும் ஒரு வழியாக அமைந்துள்ளது. இது மதம் சார்பாக கோவில் வளாகத்தில் நடத்தப்படும் இசை மற்றும் நடனம் ஆகியவற்றிற்கான ஒரு முக்கிய இடமாகும்.[2] பிரார்த்தனை மண்டபம் என்பது பொதுவாக கோவிலின் கருவறைக்கு முன் (கர்ப்பகிருகம்) முன் கட்டப்பட்டிருக்கும். ஒரு பெரிய கோவில் பல மண்டபங்களைக் கொண்டிருக்கும்.[3]

ஒரு கோவிலில் ஒன்றுக்கு மேற்பட்ட மண்டபங்கள் இருந்தால், ஒவ்வொன்றும் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சிகளுக்கு ஒதுக்கீடுச் செய்யப்பட்டு அதன் பயன்பாட்டைப் பிரதிபலிக்கும் ஒரு பெயரைக் கொண்டிருக்கும். உதாரணமாக, தெய்வீக திருமணத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மண்டபம் 'கல்யாண மண்டபம்' எனக் குறிப்பிடப்படுகிறது.[4] பெரும்பாலும் மண்டபங்களில் தூண்கள் கொண்டு அமைக்கப்பட்டு, அத்தூண்கள் சிற்பங்களைக் கொண்டு அலங்கரிக்கபடுகின்றன.[5] சமகால நிகழ்வுகளின் அடிப்படையில், இந்து திருமணங்கள் நிகழ்த்தும் ஒரு அமைப்பை அது பிரதிபலிக்கிறது. மண்டபத்தின் மையப்பகுதியில் மணமகனும் மணமகளும் அமர்ந்திருக்க அவர்களுக்கு முன்னர் ஒரு புனிதத் தீ மூட்டப்பட்டுத் திருமணச் சடங்குகள் நடைபெறுவது வழக்கமாகும்.

Remove ads

பெயர் வேறுபாடுகள்

Thumb
பஞ்ச கூட சமணர் கோவில் மண்டபம்

ஒரு கோவிலில் ஒன்றுக்கு மேற்பட்ட மண்டபத்தில் இருக்கும் போது, அவை வெவ்வேறு பெயர்களால் வழங்கப்படுகின்றன.[6][7]

  • அர்த்த மண்டபம் அல்லது அர்த மண்டபம் - கோவிலின் வெளிப்புறம் மற்றும் கருவறைக்கு இடையே உள்ள இடைவெளியில் (கர்ப்பகிருகம்) அமைந்திருக்கும் மண்டபங்கள்
  • ஆஸ்தான மண்டபம் - மாநாட்டு மண்டபம்
  • கல்யாண மண்டபம் - இறைவனுடைய திருமண சடங்கிற்காக அர்ப்பணிக்கப்பட்டது
  • மகா மண்டபம் - (மகா = பெரியது) கோவிலில் பல மண்டபங்கள் இருந்தாலும், இது மிகப் பெரியதாகவும், மிக உயரமானதாகவும் காணப்படும். இது மத சொற்பொழிவுகள் நடத்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. சில நேரங்களில், மகா மண்டபம் ஒரு இடைவெளிகூறு அச்சு வழியாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது (இந்த இடைவெளிகூறு மைய அச்சுடன் மறைந்திருக்கும்). வெளிப்புறத்தில், ஒரு பெரிய ஜன்னல் வழியாக வெளிச்சம் நிறைந்து, கோவிலுக்குள் ஒளி மற்றும் புத்துணர்வை ஏற்படுத்துகிறது.
  • நந்தி மண்டபம் (அல்லது நந்தி மந்திர்) - சிவன் கோயில்களில், புராதன காளையான நந்தி சிலை கொண்ட கூடம், சிவன் சிலை அல்லது லிங்கத்தை பார்த்துக் கொண்டிருக்கும்.
  • இரங்கா மண்டபம்
  • மேகநாத் மண்டபம்
  • நமஸ்கார மண்டபம்
  • திறந்த மண்டபம்
Remove ads

பிற மொழிகள்

Thumb
ஒரு தாய்லாந்து புத்த மண்டபம் அல்லது மண்டோப், வாட் அருண் , பாங்காக்
Thumb
ஜாவா, இந்தோனேசியாவின் அரச பெண்டோபோ, பொதுவாக சுல்தான் அரண்மனைகளில் காணப்படுகிறது.

இந்தோனேசியாவில், மண்டபம் ஒரு பெண்டோபா என அறியப்படுகிறது. அசாதாரணமாக, இந்தோனேஷிய பெண்டோபாக்கள் பெரும்பாலும் முஸ்லீம் சமூகங்களால் கட்டப்பட்டது. பல மசூதிகள் பெண்டோபாவை பின்பற்றியே மேரு மலையை நினைவுபடுத்துவது போல அடுக்கு கூரைகள் கொண்ட, வடிவமைப்பினை பின்பற்றியே கட்டப்பட்டுள்ளாது.

தமிழ் மொழியில் முற்றிலும் ஆயிரம் தூண்களைக் கொண்ட மண்டபத்தை ஆயிரம் கால் மண்டபம் என அழைக்கப்படுகிறது. இதன் தூண்கள் கோயிலின் விமானம் தளம் வரை இணைக்கப்பட்டு திராவிட கட்டிடக்கலைக்கு ஒரு தனித்துவமான பங்கினை தருகிறது

பர்மிய மொழியில் மண்டபம் என்பது இது பாலி மாண்டாட் என்ற சொற்பிறப்பியல் தோற்றம் கொண்டது, புத்தர்களின் திங்கியான் திருவிழா காலங்களில் மக்களின் மேல் நீர் தெளிக்கும் திறந்த மேடை அல்லது கூடமாகும்.

தாய் மொழியில் மண்டபா அல்லது மண்டூப் என அழைக்கப்படும் இது பெரும்பாலும் தாய் கோவில் கலை மற்றும் கட்டிடக்கலையை பிரதிபளிக்கிறது. கோர் ட்ராய் என்ற வடிவில் (கோயில் நூலகம்) அல்லது கோவில் பலிபீடம் போன்றவை சியாங் மை என்ற இடத்தில் வாட் சியாங் மேன் என்ற மண்டபம் அமைந்துள்ளது..

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads