மண்டல் (ஆந்திரம் மற்றும் தெலங்கானா)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மண்டல், ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்த என். டி. ராமராவ் ஆட்சிக் காலத்தில், 25 மே 1985 அன்று மண்டல் நிர்வாக அலகு தோற்றுவிக்கப்பட்டது. தற்போது மண்டல்கள் அமைப்பு தற்கால ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் மட்டும் செயல்படுகிறது. [1][2] இதனால் தாலுக்கா அலுவலகங்கள் ஒழிக்கப்பட்டது. இம்மண்டல்கள் மாவட்ட ஆட்சித் தலைவரின் கீழ் இயங்கும். தற்போது ஆந்திரப் பிரதேசத்தில் 679 மண்டல்களும்[3] ; தெலங்கானாவில் 612 மண்டல்களும் செயல்பாட்டில் உள்ளது.[4].

Remove ads

வரலாறு

ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்த என். டி. இராமராவ் ஆட்சியின் போது, பெரிய நிலப்பரப்பளவுகளுடன் செயல்பட்ட தாலுக்கா மற்றும் ஊராட்சி ஒன்றிய அமைப்புகளை கலைத்து விட்டு, பொதுமக்கள் எளிதாக அனுகும் வகையில் சிறிய பரப்பளவில் செயல்படும் மண்டலங்கள் நிறுவப்பட்டது. இதன் மூலம் மண்டல் அலுவலகம் நவீனமயமாக்குதல், பதிவுகளை வைத்திருத்தல் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை மேலும் பரவலாக்கப்பட்டது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads