மண்டி கோபிந்த்கர்
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மண்டி கோபிந்த்கர் (Mandi Gobindgarh) இந்திய மாநிலம் பஞ்சாபில் பதேகாட் சாகிப் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரமும் நகராட்சியுமாகும். இங்கு ஏராளமான எஃகு உருட்டாலைகளும் தொழிற்சாலைகளும் அமைந்துள்ளதால் இந்நகரம் சில நேரங்களில் எஃகு நகரம் எனவும் "லோகா மண்டி" ("இரும்புச் சந்தை") எனவும் அழைக்கப்படுகின்றது. வடித்தல் மற்றும் வார்ப்பகங்கள் நிறைய அமைந்துள்ள இந்த நகரம் உலகளவிலும் அறியப்படுகின்றது. பஞ்சாபின் நகராட்சிகளில் செல்வச்செழிப்பான நகராட்சியாகவும் விளங்குகின்றது.
Remove ads
மக்கள்தொகையியல்
2001ஆம் ஆண்டு இந்தியக் கணக்கெடுப்பின்படி,[1] கோபிந்த்கரின் மக்கள்தொகை 55,416 ஆகும். மக்கள்தொகையில் ஆண்கள் 56% விழுக்காடாகவும் பெண்கள் 44% ஆகவும் உள்ளனர். கோபிந்த்கரின் சராசரி படிப்பறிவு வீதம் தேசிய அளவான 59.5% விடக் கூடுதலாக 69% ஆக உள்ளது : ஆண்களின் படிப்பறிவு 72%, பெண்களின் படிப்பறிவு 67%. மக்கள்தொகையில் 12% ஆறு அகவைக்கு கீழுள்ளனர்.
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads