மண் சிதைவாக்கம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மண் இழப்பும் தரமிறக்கமும் என்பவை நிலைத்துள்ள மண் சமனிலையை இழக்கும் இரண்டு வகைப் படிமலர்ச்சி நிகழ்வுகளாகும். மண் இழப்பு என்பது மண்ணரிப்பால் உருவாகிறது. இந்நிலையில் மண்ணின் தொடர்வு அதன் இயற்கையான கன்னிநிலப் படிவ உருவாக்கநிலையை எட்டும் படிமலர்ச்சியாகும். மண்தரமாற்றம் அல்லது மண்சிதைவாக்கம் என்பது இயற்கைப் படிமலர்ச்சியில் இருந்து மாறுபட்டதாகும். இந்நிலை களக் காலநிலையாலும் தாவரக் கலப்பாலும் உருவாகும் படிமலர்ச்சியாகும்.[1] இது முதன்மையான தாவர்த்திரள் பேரளவில் துணைநிலைக் குழுமப் பேரளவுப் பதிலீட்டால் உருவாகிறது. இது படியும் அடிமண்ணின் உட்கூறையும் அளவையும் மாற் றி, மண் ஏற்பாட்டையே மாற்றுகிறது இது நேரடியான மாந்தவினைகளால் ஏற்படுகிறது. மண் தரமாற்றம் சூழலியல் குலைவு அல்லது தேவையற்ற எழிப்புநீக்கம் போன்ற மாற்றத்தையும் அதாவது மண்சிதைவாக்கத்தையும் குறிப்பிடலாம்.[2]

மண்தரமிழப்பு அல்லது மண்வளமிழப்பு என்பது மண் ஊட்டச்சத்து நிலை, உயிரினத் திரள் குறைதல், கரிமவளம் இழப்பு, மண் உட்கூற்றுக் கட்டமைப்பின் சிதைவு ஆகியவற்றின் தொகுப்பைக் குறிக்கும். மண்ணின் தரமும் ஆக்கத்திறனும்வேளாண் நடைமுறைகள்,காடழிப்பு, ச்ரங்கம் அகழ்தல், கழிவு வெளியேற்றம், உர வேதிமக் கசிவுகளாகியவற்ரால் உருவாகிறது.

பாண் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி ஆராய்ச்சி மைய ஆய்வின்படியும் வாழ்சிங்டனில் அமைந்த பன்னாட்டு உணவு பாதுகாப்புக் கொளகை ஆராய்ச்சி நிறுவன ஆய்வின்படியும், மண்னின் தரம் மேய்ச்சல்பகுதிகளில் 33% அளவுக்கும் வறள்நிலப்பகுதிகளில் 25% அளவிக்கும்காடுகளில் 23% அளவுக்கும் கடந்த முப்பது ஆண்டுகளில் இழக்கப்பட்டுள்ளதுலிப்பகிதிகளை வாழிடமாகக் கொண்டவர் 3.2 பில்லியன் மக்களாவர்.[3]

Remove ads

பொது

மண் உருவாக்கத்தின் தொடக்கத்தில், வெற்றுப்பாறை மேல்கவிப்பாக முதனிலை உயிரினங்களாகிய கற்பாசிகளும் பாசடைகளும் படர்ந்தன.[4] இவற்றைப் பின்னர் மூலிகை, புதர், இறுதியாக காடுகளின் உருவாக்கம் தொடர்ந்தன. இணயாகவே, ஏ வகை மண்ணடுக்கும் பின் கனிமச் செறிவான பி வக மண்ணடுக்கும் தோன்றின. ஒவ்வொரு மண்ணடுக்கின் தொடர்கட்டங்களிலும் சிலவகை மண்ணும் தாவர மட்கும் சூழற்சுவடுகளும் அமைந்தன. இது சூழல் மண்டலத்தை வரையறுத்தது.

Thumb
செறிந்த உழவால் மண்தரமிழப்பு
Thumb
வடக்கு பிரான்சு, மண்ணரிப்பைக் குறைக்க நடப்பட்ட விலோ மரங்களும் சரிவரண்களும்

அண்மைய கண்டுபிடிப்புகளில் இந்த மண்துகள்கள் ஒன்றோடொன்று உராயும் பொழுது மின்னூட்டம் தூண்டப்படுகிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தகைய துகள்கள் எதிர்மின்நிலையால் துண்டப்பட்டு மிகப்பெரிய துகள் சிதைவுற்று மேலும் அதிக நுண்துகள்கள் உருவாக்கப்படுகிறது.இந்த துகள்கள் தொடக்க நிலையில் ஒன்றிணைந்து வளிமண்டலத்தில் வீண்கற்கால உருவாகத் தக்க தனிச்சிறப்பு பெறுகிறது. சூாியகதிர்கள் வளிமண்டல்த்தின் வழியாக புவியை வந்தடையும் பொழுது இத்தகைய துகள்களில் உள்ள நீராவி ஆவியாக வெளியேற்றப்படுகிறது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads