மண் சுமந்த படலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மண் சுமந்த படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் 63வது படலமாகும். இப்படலம் பரி நரியாக்கிய படலம் என்பதன் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.
சுருக்கம்
- ஒரு முறை மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து பல கரைகளை உடைத்துக் கொண்டு நீர் பாய்ந்தது.
- அப்போது வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த மதுரையை ஆளும் பாண்டிய மன்னன் ஊரில் இருக்கும் அனைவருக்கும் கரையை அடைக்கும் பணியை தந்தான்.
- அதை மேற்பார்வை காண அதிகாரிகள் மூலம் ஊரில் இருப்பவர்கள் கரையின் அளவினை நிர்ணயம் செய்தார்கள்.
- அந்த ஊரில் வந்தி எனும் மூதாட்டி வாழ்ந்து வந்தாள் அவர் பிட்டினை விற்று பிழைத்து வருபவள் அவளுக்கு வயது மூப்பின் காரணமாக வைகை கரையை அடைக்கும் பெரும் பணியை செய்ய முடியத நிலையாகும்.
- அப்போது இறைவன் ஒரு சிறுவனாக " பாலசுந்தரேசன் " என்ற பெயரில் வந்து தான் வந்திப் பாட்டிக்கு பதிலாக ஆற்றில் கரை அடைப்பதாக ஒப்புக் கொண்டான்.
- அதற்கு கூலியாக உடைந்த பிட்டினை தருவதாக வந்திப்பாட்டியும் ஒப்புக் கொண்டாள்.
- மேலும் சிறுவனாக வந்த இறைவன் மூதாட்டியிடம் பிட்டினை வாங்கி சாப்பிடுவதும் அது தீரும் வரை ஆடிப் பாடுவதுமாக இருந்தார்.
- அதனால் வந்தி மூதாட்டிக்குறிய இடத்தில் மட்டும் கரை கட்டப்படாமல் இருந்தது.
- மேலதிகாரிகள் அதனை விசாரித்துக் கொண்டு இருக்கையில் பாண்டிய மன்னன் வந்தார்.
- அவரிடம் மேலதிகாரிகள் கூலியைப் பெற்றுக் கொண்டு சிறுவன் வேலை செய்யாமல் உறங்கி கொண்டு உள்ளான் என புகார் செய்தனர்.
- உடனே பாண்டிய மன்னன் உறங்கி கொண்டு இருக்கும் சிறுவனான பாலசுந்தரேசன் முதுகில் பிரம்பால் ஓங்கி அடித்த கணமே அந்த பிரம்படி எல்லா உயிர்கள் மேலும் அடித்த பாண்டிய மன்னன் மற்றும் அதிகாரிகள் முதுகிலும் அந்த பிரம்படி வலிக்க செய்தது.
- மேலும் இறைவன் ஒரு கூடையில் மட்டும் மண் சுமந்து கரையை அடைக்க அனைத்து கரைகளும் அடைக்கப்பெற்று வைகை நதி வெள்ளம் கட்டுக்குள் வந்தது இறைவன் மறைந்தார்.
- மூதாட்டி வந்தியை சிவகணங்கள் வந்து அழைத்துச் சென்றன. [1]
Remove ads
காண்க
- இந்த திருவிளையாடல் புராண நிகழ்வை பிட்டுக்கு மண் சுமந்த சுந்தரேசபெருமான் என்று அழைக்கப்படுகிறது.
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads