மதியுரையகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மதியுரையகம் (think tank) எனப்படுவது குறிப்பிட்ட விடயங்கள் நோக்கி ஆராய்ச்சி செய்யும் நிறுவனம் அல்லது நிறுவனப்படுத்தப்படாத குழு. இது பொதுவாக வணிக நிறுவனங்கள், ஆய்வுக் கூடங்கள், பல்கலைக்கழகங்கள், அரசியல் கட்சிகள் போன்றவற்றுடன் சேர்ந்து இயங்கும். இவை கருத்துக்கள், ஆலோசனைகள் மற்றும் வழிமுறைகளை வழங்கி அவற்றுக்குரிய குறிக்கோளை முன்னெடுத்துச் செல்ல முயலும்.
மதியுரையகங்கள் பல வகை உண்டு. இவற்றில் பெரும்பாலானவை அரசியல், சமூகம் சார்ந்த விடயங்களையே கருப்பொருளாக கொள்கின்றன. இவை கொள்கைகளை உருவாக்கி அவற்றை செயலாக்கம் செய்வதெப்படி என்பதை விளக்கி அவற்றின் செயலாக்கத்திலும் பங்கு கொள்கின்றன. ஐக்கிய அமெரிக்காவின் வலதுசாரி மதியுரையகங்கள் இவற்றுக்கு எடுத்துக்காட்டாகும்.
இந்த நிறுவனங்களில் படிப்பாளர்கள் அல்லது புலமையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், துறைசார் வல்லுனர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோர் பணியாற்றுவார்கள்.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads