மதீரா

From Wikipedia, the free encyclopedia

மதீரா
Remove ads

மதீரா(Madeira (ஒலிப்பு: /məˈdɪərə/) 32°22.3′N 16°16.5′W மற்றும் 33°7.8′N 17°16.65′W இடையே அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள போர்த்துக்கீசிய தீவுக்கூட்டமாகும். இது போர்த்துக்கல் தன்னாட்சி வலயங்களில் ஒன்றாகும்.இத்தீவுக்கூட்டத்தில் மதீரா தீவும் போர்ட்டோ சான்டோ தீவும் மட்டுமே மக்கள் வாழும் தீவுகளாகும்.இத்தீவுகள் எரிமலை வெடிப்புகளால் உண்டானவையாதலால் எந்த கண்டத்தையும் சேர்ந்ததில்லை.ஆனால் கடந்த 600 ஆண்டுகளாக இனத்தால்,பண்பாட்டால்,பொருளியலால்,அரசியலால் ஐரோப்பாவுடன் தொடர்புள்ளது. ஆப்பிரிக்காவின் அண்மையில் இருப்பதால் மொரோக்கோ இதன் மீது உரிமை கோரியுள்ளது. தற்போது மதீரா போர்த்துக்கல் ஆளுமையில் ஐரோப்பிய ஒன்றியப் பகுதியாக விளங்குகிறது.

விரைவான உண்மைகள் மதீரா தன்னாட்சி வலயம்Região Autónoma da Madeira, தலைநகரம் ...

இத்தீவுக்கூட்டம் போர்த்துகீச மாலுமிகளால் 1418-1420 காலகட்டத்தில் கண்டறியப்பட்டன. ஆண்டு முழுவதும் இயங்கும் மகிழ்வுத்தலமாக விளங்கும் மதீரா அதன் மதீரா திராட்சைமது,பூக்கள், உடைப்பின்னல் கலைஞர்கள் மற்றும் புத்தாண்டு கோலாகலங்களுக்கு புகழ் பெற்றது. புத்தாண்டு முதல்நாள் நிகழும் வாணவேடிக்கைகள் உலகிலேயே மிகப் பெரியது என கின்னஸ் உலக சாதனைகள் படைத்துள்ளது.[1]. இதன் துறைமுகம் – ஃபன்ச்சல் – ஐரோப்பா மற்றும் கரிபியன் தீவுகளுக்கிடையேயான கப்பல் போக்குவரத்திற்கும் பயணிகள் போக்குவரத்திற்கும் முக்கிய வழிநிறுத்தமாகும்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads