மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மதுரைத் தமிழக்கூத்தன் நாகன் தேவனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது அகநானூறு 164.
- திணை - முல்லை

பாடல் சொல்லும் செய்தி
போர்க்களப் பாசறையில் இருக்கும் தலைவன் தலைவியை நினைத்துக்கொண்டு தன் நெஞ்சோடு பேசுகிறான்.
ஞாயிறு தன் கதிர்க்கைகளை நீட்டி மாநிலத்தைப் பசுமை இல்லாமல் செயத நிலைமை மாறிப் பெருமழை பொழிகிறது. முல்லையும் தோன்றியும் பூத்துக் காடே வெறிமணம் கமழ்கின்றது. தேன் உண்ணும் வண்டுகள் ஆரவாரிக்கின்றன.
அங்கே என் தலைவி தன் கண்களிலிருந்து பனியைப் பெய்துகொண்டிருப்பாள். இனைவாள்(ஏங்குவாள்). அவள் தன் பழைய நிலையைப் பெற நான் செல்லவேண்டாமா?
வெஞ்சின வேந்தன் தன் போர்த்தொழில் வினையைக் கைவிட்டால்தானே செல்லமுடியும்!
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads