மத்திய நேரடி வரிகள் வாரியம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) என்பது இந்தியாவின் நேரடி வரிச் சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பில் உள்ள அரசு நிறுவனமாகும். இது நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய அரசின் வருவாய்த் துறையின் ஒரு பகுதியாகும். இது 1963இல் நிறுவப்பட்டது. மத்திய நேரடி வரிகள் வாரியமானது தலைவர் மற்றும் 6 உறுப்பினர்களைக் கொண்டது. மத்திய நேரடி வரிகள் வாரியம் வருமான வரி, நிறுவன வரி, செல்வ வரி மற்றும் மூலதன ஆதாய வரிகளை பொதுமக்களிடமிருந்து நேரடியாக வசூலிக்கிறது. இவ்வாரியத்தின் கீழ் வருமான வரித் துறை மற்றும் வருமான வரி விசாரணை தலைமை இயக்குநரகம் உள்ளிட்ட 8 இயக்குநரகங்கள் செயல்படுகிறது.

Remove ads

நேரடி வரிகள் வாரியத்தின் கீழ் செயல்படும் துறைகள்

வாரிய உறுப்பினர்கள்

மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவரை இந்தியக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். இதன் பிற 6 உறுப்பினர்களை நிதி அமைச்சரால் நியமிக்கப்படுகிறார்கள். இதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் ஆவார். வாரிய உறுப்பினர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.[1]

  • தலைவர் -
  • உறுப்பினர் - வருமான வரி & வருவாய் -
  • உறுப்பினர் - சட்டம் & கணினிமயமாக்கல்
  • உறுப்பினர்- நிர்வாகம்
  • உறுப்பினர்- பரிவர்த்தனை செயல்முறை அமைப்பு
  • உறுப்பினர்- புலனாய்வு & விசாரணை
  • உறுப்பினர்- தணிக்கை & நீதித் துறை
Remove ads

முதன்மை செயல்பாடுகள்

  • இந்தியாவில் நேரடி வரி சட்டங்களை அமல்படுத்துதல்
  • வருமான வரி, நிறுவன வரி, செல்வ வரி மற்றும் மூலதன ஆதாய வரிகளை வசூலித்தல்.
  • வருமான வரித்துறை அதிகாரிகளை நிர்வகித்தல் மற்றும் மேற்பார்வை செய்தல்
  • நேரடி வரிவிதிப்பு தொடர்பான சட்டக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை அமலாக்கம் செய்தல்.
  • வருமான வரித்துறையின் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்தல்.
  • நேரடி வரி நிர்வாகம் மற்றும் கொள்கை விஷயங்களில் ஆய்வுகளை நடத்துதல்
  • வரி செலுத்துவோர்களிடையே வரி செலுத்துவது தொடர்பாக விழிப்புணர்வை மேம்படுத்துவதில் பங்கு வகித்தல்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads