மனித மரபணுத்தொகைத் திட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மனிதன் மரபணுத்தொகைத் திட்டம் என்பது மனிதரின் மரபணுத்தொகையை முழுமையாகக் கண்டறிந்து ஆவணப்படுத்த முன்னெடுக்கப்பட்ட திட்டம் ஆகும். இந்த திட்டம் அமெரிக்காவின் தலைமையில் மேலும் ஐந்து நாடுகள் இணைந்து (சீனா, பிரான்ஸ், யேர்மனி, யப்பான், பிரித்தானியா) முன்னெடுக்கப்பட்டது.

மனித வரலாற்றில் இது ஒரு முக்கிய அறிவியல் தொழில்நுட்ப மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. மனிதரின் மரபகராதியை பிற உயிரின மரபகராதிகளுடன் ஒப்பிட்டு நடைபெற்ற ஆய்வுகள் படிவளர்ச்சிக் கொள்கையை ஆணித்தரமாக உறுதி செய்தது. மரபகராதி மருத்துவத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பாக்கப்படுகிறது. வரலாற்றில் முதல் முறையாக மனிதர் தமது மரபணுவை நுண்ணியமுறையில் மாற்றி அமைக்க இந்த திட்டம் வழியமைத்தது. எதிர்காலத்தில் மனிதர் திட்டமிட்டு தமது படிவளர்ச்சியை முன்னெடுக்க முடியும்.
Remove ads
வரலாறு
மனித மரபணுத்தொகையை முழுமையாக ஆராய்ந்து அறிவதற்காக மனித மரபணுத்தொகைத் திட்டம் 1989 இல் [1] ஆரம்பிக்கப்பட்டு, 2000 ஆம் ஆண்டில் முழு மரபணூத்தொகைக்குரிய ஒரு சுமாரான வரைவு செய்து முடிக்கப்பட்டது[2]. பின்னர் 2003 ஆம் ஆண்டில், அப்போதுள்ள தொழில்நுட்பத்தின் அடிப்படையில் முக்கியமான மரபணுக்கள் அனைத்தையும் உள்ளடக்கிய, முழுமையான மரபணுத்தொகை அறியப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது[3]. 2006 ஆம் ஆண்டில், கடைசியாக ஆராயப்பட்டுக் கொண்டிருந்த நிறப்புரியின் ஆய்வும் முடிவடைந்து, Nature எனப்படும் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டதுடன், மனித மரபணுத்தொகை ஆய்வுத் திட்டம் முழுமையடைந்து விட்டது[4]. இதன் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்கள் உலகெங்கும் உள்ள உயிரியல் மருத்துவ ஆய்வாளர்கள், மருத்துவர்களால் பயன்படுத்தப்பட முடியும்.
Remove ads
இந்தியா பங்கெடுக்க தவறுதல்
இந்த திட்டத்தில் ஆறுநாடுகள் முக்கிய பங்களித்தன. இதில் இந்தியா பங்களிக்க தவறிவிட்டது. இதை தவறவிட்டதற்கு இந்தியாவின் மந்தமான அரச துறையே காரணம் என இந்தியாவை பங்கெடுக்க ஊக்குவித்த இந்திய விஞ்ஞானி Pushpa M. Bhargava ஒரு கட்டுரையில் தெரிவித்தார்.[5]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads