மனு (இந்து மதம்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்து தொன்மவியலின் படி மனு என்பது ஒரு பதவியாகும். பிரம்மனின் ஒரு பகலான கல்பத்தில் பதினான்கு மனுக்கள் ஆட்சிபுரிவதாக குறிப்புகள் காணப்படுகின்றன. ஒரு மனுவின் ஆட்சி காலம் மனுவந்தரம் எனப்படுகிறது.

தற்போது நடைபெறுகின்ற சுவேத வராக கற்பத்தில் சுவயம்பு, சுவாரோசிஷம், உத்தமம்,தாமசம், ரைவதம், சாக்சூசம், வைவசுவதம், சாவர்ணி, தக்ச சாவர்ணி, பிரம்ம சாவர்ணி, தர்ம சாவர்ணி, ருத்திர சாவர்ணி, ரௌசிய தேவ சாவர்ணி, இந்திர சாவர்ணி ஆகிய பதினான்கு மனுக்கள் உள்ளார்கள்.

மனு எனும் வேர்ச்சொல்லிருந்து மனுஷ்யன், மனிதன் சொற்கள் தோன்றியது.

Remove ads

மனுக்கள்

  1. சுவயம்பு மனு - சுவயம்பு மனு பிரம்மன் சுவேத வராக கற்பத்தில் தோற்றுவித்த முதல் மனிதர் ஆவார். இவர் சதரூபை என்பவரை மணந்து பிரியவிரதன், உத்தானபாதன் என்ற இரு மகன்களையும், ஆகுதி, பிரசூதி என்ற மகள்களையும் பெற்றார். பிறகு ஆகுதியை உருசி என்ற பிரஜாபதிக்கும், பிரசூதியை தட்சன் என்ற பிரஜாபதிக்கும் மணம் செய்வித்தார்.[1]
  2. சுவாரோசிஷம் -இவர் அக்னி தேவனின் மகன் ஆவார்.
  3. உத்தமம் -இவர் உத்தானபாதன் -சுருசி தம்பதிகளின் மகன் ஆவார். இவருக்கு துருவன் என்ற சகோதரனும் உண்டு.
  4. தாமசம் -இவர் ஸ்வாஷ்ட்ஷன்-உத்பலாவதி தம்பதிகளின் மகன் ஆவார்.
  5. ரைவதம் -
  6. சாக்சூசம் -
  7. வைவசுவதம் -
  8. சாவர்ணி - சாவர்ணி மனு சூரியன் - சாயா தேவி தம்பதிகளின் மகனாவார். இவர் எட்டாவது மனுவந்தரத்தின் அரசன்.[2]
  9. தக்ச சாவர்ணி -
  10. பிரம்ம சாவர்ணி -
  11. தர்ம சாவர்ணி -
  12. ருத்திர சாவர்ணி - இவர் ருத்திரனின் மகனாவார்
  13. ரௌசிய தேவ சாவர்ணி -
  14. இந்திர சாவர்ணி-
Remove ads

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads