மன்னார்குடி சாவித்திரி அம்மாள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மன்னார்குடி சாவித்திரி அம்மாள் (19 ஜூன் 1922 - 8 ஆகஸ்ட் 1973)ஒரு கோட்டு வாத்திய இசைக்கலைஞர் ஆவார். [1][2]

கோட்டு வாத்திய இசைக்கலைஞர்
இளமைக்காலம்
1922 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19-ஆம் நாள் ஓர் இசைவேளாளர் குடும்பத்தில் பிறந்தார். ஸ்ரீரங்கம் ஐயங்காரிடம் ஆரம்ப இசை கற்றார். பின்னர் கம்பன்குடி நாராயண ராவ் அவர்களிடம் கோட்டு வாத்தியம் பயின்றார். கொன்னக்கோல் வாத்திய மேதை மன்னார்குடி வைத்தியலிங்கம் பிள்ளையிடம் இசை நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ச்சி அடைந்தார்.
இசைப்பயணம்
தனது 13 ஆவது வயதில் இசைக்கச்சேரிகள் செய்ய ஆரம்பித்தார். இவரது கணவர் வயலின் வித்துவான் கிருஷ்ணமூர்த்தி பிள்ளையுடன் இணைந்து பல கச்சேரிகள் செய்தார். கோட்டு வாத்தியம் இசைக்கும்போது கூடவே தானும் பாடுவது இவரது வழக்கமாகும். 1943 ஆம் ஆண்டு சென்னை மியூசிக் அகாடமி நிகழ்ச்சி நிரலில் இவரது இசைக்கச்சேரி கோட்டு வாத்தியமும் இசைக்கச்சேரியும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. 1940 - 1950 காலப்பகுதியில் சென்னை டிசம்பர் இசைவிழாவில் கோட்டு வாத்திய இசைக்கச்சேரிகள் 4 மட்டுமே இடம் பெற்றன. அவற்றுள் 3 சாவித்திரி அம்மாள் நிகழ்த்தியவைகளாகும். 1960 களில் திருப்பதி பத்மாவதி கலைக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
Remove ads
விருதுகள்
- 1953 ஆம் ஆண்டு கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை யாழ் இசைச் செல்வி என்ற பட்டத்தை வழங்கினார்
- 1968 ஆம் ஆண்டு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்தது.
இறப்பு
மன்னார்குடி சாவித்திரி அம்மாள் 1973 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் நாள் உயிர் நீத்தார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads