மன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில் (Mannargudi Rajagopalaswamy temple) மன்னார்குடி, தமிழ்நாடு, இந்தியாவில் அமைந்துள்ள ஒரு வைணவக் கோயில் ஆகும். இங்கு உறையும் ராசகோபாலசுவாமி கிருஷ்ணரின் ஒரு வடிவமாக அறியப்படுகிறது.[1] இந்தக் கோவில் 23 ஏக்கர் (93,000 ச.மீ.) பரப்பளவில் பரவியுள்ளது. குருவாயூரைச் சேர்த்து இந்த கோவிலை தட்சிண துவாரகை (தெற்கு துவாரகா) என இந்துக்கள் கூறுகின்றனர்.
Remove ads
கோயில்
உறையும் ராஜகோபால சுவாமியின் திருஉருவத்தின் உயரம் 12 அடி (3.7 மீ) ஆகும். ஆலயம் நுழைவு வாயிலில் மழை நீர் சேகரிக்கப்பட ஒரு பெரிய தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. திருக்கோவில் வளாகத்தில் 16 கோபுரங்களுடன் (கோபுரம் நுழைவாயில்), 7 தூண்கள் (பிராகாரத்தில்), 24 சன்னதிகள், ஏழு மண்டபங்கள் (அரங்குகள்) மற்றும் ஒன்பது புனித தீர்த்தங்கள் (கோவில் குளங்கள்) உள்ளன. உற்சவர் சிலை சோழர் காலத்தினைச் சேர்ந்த ஓரு வெண்கலச் சிலை ஆகும். இங்குள்ள குளம் 1,158 அடி நீளமும், 837 அடி அகலமும் கொண்டுள்ளது; இது ஹரித்திராந்தி என அழைக்கப்படுகிறது
- தல மூர்த்தி : ஸ்ரீ ராஜகோபாலசுவாமி
- தல இறைவி : செங்கமலத்தாயார் (செண்பக லெட்சுமி, ஹேமாம்புஜ நாயகி, ரக்தாப்ஜ நாயகி, படிதாண்டாப் பத்தினி)
- தல தீர்த்தம் : ஹரித்ராநதி, துர்வாச தீர்த்தம், திருப்பாற்கடல், கோபிகா தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்கர தீர்த்தம்.
Remove ads
வரலாறு
பெயர்க்காரணம்
மன்னார்குடிக் கல்வெட்டுகளில் இக்கோயிலின் பெயர் “இராசாதிராச விண்ணகர்” என்று குறிக்கப்படுவதாள், இக்கோயில் சோழப் பெருவேந்தன் இராசாதிராசன் பெயரால் ஏற்படுத்தப்பட்டவொன்று ஆகும். முதற் குலோத்துங்க சோழன் காலத்திலிருந்தே இக்கோயில் இறைவனுக்கு “வண்டு வராபதி ஆழ்வார்” என்ற பெயர் வழங்கி வந்திருக்கின்றது.[2] நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த பெரியோர்கள் இங்கு வாழ்ந்தமையால் ராஜாதி ராஜ சதுர்வேதி மங்கலம் என்றும், செண்பக மரங்கள் அடர்ந்த காடுகள் நிறைந்து காணப்பட்டதனால் சென்பகாரண்யா க்ஷேத்திரம் எனவும், குலோத்துங்க சோழன் இக்கோயிலை அமைத்தபடியால் குலோத்துங்க சோழ விண்ணகரம் என்றும், ஸ்ரீ ராஜகோபாலன் கோயில் கொண்டிருப்பதால் ராஜமன்னார்குடி என்றும், மன்னர்கள் கோபாலனுக்கு கோயில் கட்டியதால் மன்னார்கோயில் என்றும், இவ்வூர் அழைக்கப்படுகிறது.
கட்டமைப்பு
இந்தக் கோவில் முதலாம் குலோத்துங்க சோழனால் சுண்ணாம்புக் கலவை மற்றும் செங்கல் கொண்டு பொ.ஊ. 1070-1125-இல் கட்டப்பட்டது. மன்னார்குடி ஸ்ரீ ராஜாதி ராஜா சதுர்வேதி மங்கலம் என குறிப்பிடப்படுகிறது, மேலும் மன்னார்குடி நகரம் கோவில் சுற்றி வளரத் தொடங்கியது.
கோவில் கல்வெட்டில் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் காசு கொள்ளா இறையிலியாக நிலம் வழங்கப்பட்டிருந்திருக்கிறது. முதலாம் குலோத்துங்கசோழனின் ஆட்சிக்காலத்தில் இப்பெருமான் கோயிலின் முன்னால் மாமரம் ஒன்றிருந்திருக்கிறது. இம்மாமரத்தின் கீழே பொ.ஊ. 1018-இல் இராசாதிராசச் சதுர்வேதிமங்கலத்து சபையார் கூடி காடு, நாடு, நகரம், கள்ளப்பற்று ஆகியவற்றில் 30,000 காசுகள் வகுலித்துக் கோயிலுக்குக் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.[2]
Remove ads
கோயில் விழாக்கள்
பங்குனிப் பெருவிழா
இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனிப் பெருவிழா 18 நாட்களும், அதைத் தொடர்ந்து, 12 நாள்கள் நடைபெறும் விடையாற்றி விழா கிருஷ்ண தீர்த்த தெப்ப உத்சவத்துடன் நிறைவடையும்.[3]
தேரோட்டம்
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரத்தன்று செங்கமலத் தாயார் தேரில் எழுந்தருளும் உள்பிரகார தேரோட்டம் நடைபெறும். இந்தத் தேர் கடந்த 1892-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதாக அறியப்படுகிறது. 2014-ஆம் ஆண்டு மொத்தம் ரூ. 26.50 லட்சத்தில் புதிய தேர் செய்யும் பணி நிறைவுற்றது.[4]
படங்கள்
- கோபுரம்
- ராசகோபுரம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads