மன்னார் கத்தோலிக்க மறைமாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மன்னார் கத்தோலிக்க மறைமாவட்டம் (Diocese of Mannar, இலத்தீன்: Dioecesis Mannarensis) என்பது இலங்கையின் வட-மேற்கே அமைந்துள்ள ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டம் ஆகும். இம்மறைமாவட்டம் மன்னார், முருங்கன், மடு, வவுனியா ஆகிய நான்கு பிராந்திய மாவட்டங்களைக் (deanery) கொண்டுள்ளது. 1981 இல் உருவாக்கப்பட்ட இம்மறைமாவட்டத்தின் தற்போதைய ஆயர் இராயப்பு யோசப் ஆவார்.[1]

விரைவான உண்மைகள் மன்னார் மறைமாவட்டம்Dioecesis Mannarensis மன்னார் மறைமாவட்ட ஆயர், அமைவிடம் ...
Remove ads

வரலாறு

இலங்கை மறைமாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அதன் ஒன்று "யாழ்ப்பாணம் திருத்தூதுப் பணியிடம்" (Apostolic Vicariate of Jaffna) என்ற பெயரில் 1845, பெப்ரவரி 17 இல் நிறுவப்பட்டு, பின்னர் 1886, செப்டம்பர் 1 இல் மறைமாவட்டம் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டது. இது பின்னர் 1893, ஆகத்து 25 இல் யாழ்ப்பாணம் மறைமாவட்டம், திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டம் என இரண்டாக்கப்பட்டது. 1975 திசம்பர் 19 இல் யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் சில பகுதிகள் பிரிக்கப்பட்டு, புதிதாக உருவான அனுராதபுரம் மறைமாவட்டத்தின் பகுதிகள் ஆயின. பின்னர், யாழ்ப்பாண மறைமாவட்டத்தில் சில பகுதிகள் பிரித்தெடுக்கப்பட்டு 1981 சனவரி 24 இல் மன்னார் மறைமாவட்டம் உருவானது.[1]

Remove ads

மன்னார் ஆயர்கள்

மேலதிகத் தகவல்கள் #, ஆயர் ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads