மன்னார் நகரம் பிரதேச செயலாளர் பிரிவு
இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவு From Wikipedia, the free encyclopedia
Remove ads
மன்னார் நகரம் பிரதேச செயலாளர் பிரிவு இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். மன்னார் மாவட்டம் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் இலங்கைத் தீவின் மேற்குக் கரையோரம் அமைந்துள்ளது. மன்னார் நகரம் பிரதேச செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 48 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இப்பிரதேச செயலாளர் பிரிவில் பின்வரும் ஊர்கள் அடங்குகின்றன.
- தலைமன்னார்
- கட்டுக்காரன்குடியிருப்பு
- பேசாலை
- சிறுத்தோப்பு
- பெரியகரிசல்
- ஓலைத்தொடுவாய்
- துள்ளுக்குடியிருப்பு
- புதுக்குடியிருப்பு
- எருக்கலம்பிட்டி
- தோட்டவெளி
- தாராபுரம்
- தாழ்வுப்பாடு
- பட்டிதோட்டம்
- எழுதூர்
- சாவற்கட்டு
- எமில் நகர்
- சின்னக்கடை
- சோனகத்தெரு
- பள்ளிமுனை
- உப்புக்குளம்
- பெரியகடை
- பனங்கட்டிக்கொட்டு
- திருக்கேதீஸ்வரம்
- நாகதாழ்வு
- புதுக்கமம்
- உயிலங்குளம்
- பரப்பாங்கண்டல்
- மாதோட்டம்
- உயிர்த்தராசன் குளம்
- பெரியநாவற்குளம்
- கள்ளிக்கட்டைக்காடு
- நீலசேனை
- வண்ணாமோட்டை
இப்பிரிவின் பெரும்பகுதி தலைமன்னார்த்தீவு ஆகும். இதன் தலைநிலப்பகுதியின் வடக்கில் கடலும், மேற்கிலும், தெற்கிலும் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவும், கிழக்கில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவும் எல்லைகளாக உள்ளன.
இப்பிரிவு 212 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].
Remove ads
குறிப்புகள்
இவற்றையும் பார்க்கவும்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads