மயங்க் யாதவ்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மயங்க் யாதவ் (Mayank Yadav) ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் உள்நாட்டுத் துடுப்பாட்டத்தில் டெல்லி அணிக்காகவும், இந்தியன் பிரீமியர் லீக்கில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காகவும் விளையாடுகிறார். இவர் வலது கை வேகப்பந்து வீச்சாளரும் வலது கை மட்டையாளரும் ஆவார்.[1]

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், பிறப்பு ...
Remove ads

தொழில் வாழ்க்கை

இவர் தனது தொழில்முறை இருபது20 போட்டியில் டெல்லி அணிக்காக மணிப்பூருக்கு எதிராக, அக்டோபர் 11, 2022 அன்று அறிமுகமானார்.[2] 12 திசம்பர், 2022 அன்று அரியானாவுக்கு எதிராக தில்லி அணிக்காக பட்டியல் அ போட்டியில் அறிமுகமானார்.[3] அதற்கு அடுத்த நாள், இவர் மகாராட்டிராவுக்கு எதிராக தில்லி அணிக்காக முதல் தரத் தொடரில் அறிமுகமானார்.[4]

பிப்ரவரி 2023-இல், இவரை லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ் அணி 2023 இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்காக ரூ. 20 லட்சத்திற்கு வாங்கியது. காயம் காரணமாக 2023 தொடரைத் தவறவிட்ட யாதவ் பின்னர் 2024ஆம் ஆண்டில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக ஐபிஎல்லில் அறிமுகமானார். இந்தப் போட்டியல் 27 ஓட்டங்களைக் கொடுத்து மூன்று இலக்குகளை வீழ்த்தினார். இந்தப் போட்டியில், ஐபிஎல் 2024-இல் மிக வேகமாகப் பந்து வீசிய யாதவ், மணிக்கு 155.8 கிலோ மீட்டர் வேகத்தை பதிவு செய்தார். ஐபிஎல் தொடரில் தனது முதல் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.[5]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads