மரக்குதிரை (இலியட்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மரக்குதிரை என்பது ஓமரின் காவியத்தில், பத்து ஆண்டுகள் தொடர்ந்த ட்ராய் நகர முற்றுகையினை முடிவிற்குக் கொண்டுவர ஒடீசியசு மேற்கொண்ட ஓர் உத்தி ஆகும். ஒரு பெரிய மரக்குதிரை உருவாக்கப்பட்டது. ஒடீசியசும் மேலும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்ளும் அக்குதிரையின் உடலுள் மறைந்து கொண்டனர். மிகத்தந்திரமாக ட்ராய் நகர மக்களை ஏமாற்றி இந்த மரக்குதிரையினை நகருக்குள் எடுத்துச் சென்றனர். குறிப்பிட்ட நாள் இரவு, வெளியில் காத்திருந்த கிரேக்க வீரர்கள் முற்றுகையினை விடுத்து தம் தாய்நாட்டிற்குத் திரும்புவது போல் பாசாங்கு செய்தனர். இதனைக்கண்ணுற்ற நகரமக்கள் வெற்றி பெற்றதாகக் கருதி, மது அருந்தி கேளிக்கையில் ஈடுபட்டனர். அவர்கள் ஓய்ந்து தளர்ந்திருந்த நிலையில், ஒடீசியசும் அவனது நண்பர்களும் மரக்குதிரையிலிருந்து வெளிப்பட்டு, சில வீரர்களைக் கொன்று, கோட்டையினையும் திறந்து விட்டார்கள். போக்குக் காட்டிய, வெளியிலிருந்த வீரர்களும் திரும்பி வந்து ஒடீசியசுடன் சேர்ந்து கொண்டனர். பெரும் போருக்குப்பின் ட்ராய் வீழ்ந்தது. ஒடீசியசின் வீர சாகச செயல்களுக்கு இதுவும் ஓர் எடுத்துக் காட்டாகும்.[1][2][3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads