மரபியல் கலந்தாய்வு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பிறக்கவுள்ள குழந்தைக்கு பாரம்பரியக் காரணங்களால் சில மரபுப் பண்புகள் ஏதேனும் அமைய வாய்ப்புள்ள பட்சத்தில், (பொதுவாக) கருவுறுவதற்கு முன்னரே தகுந்த மரபியல் மருத்துவக் கலந்தாய்வுப் பயிற்சி பெற்றோரைக் கலந்தாலோசிப்பது மரபியல் கலந்தாய்வு (Genetic counseling) எனப்படும்.

இக்கலந்தாய்வை பல கால கட்டங்களில் அவசியத்தின் படி செய்து கொள்ளலாம்:

  • கருவுறுவதற்கு முன்னர் (பெற்றவர்களில் ஒருவரோ இருவருமோ குறிப்பிட்ட மரபியல் பண்புகளைக் கொண்டிருக்கும் பட்சத்தில்)
  • கருவுற்ற பின்னர் (மீயொலி வரிக் கண்ணோட்டச் சோதனையில் குறைபாடுகள் தென்படும் பட்சத்தில் அல்லது பிரசவ சமயத்தில் தாயின் வயது 35க்கு மேல் இருக்கும் பட்சத்தில்)
  • குழந்தை பிறப்பிற்கு பின்னர் (பிறப்புக் குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில்)
  • குழந்தைப் பருவத்தில் (குழந்தையின் வளர்ச்சியில் தேக்கம் இருக்கும் பட்சத்தில்)
  • வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்னர் (வயதான பின் வரக்கூடிய சில பரம்பரை நோய்கள் குறித்து)[1][2][3]

ஏற்கனவே, உலகின் சில பகுதிகளில், திருமணத்திற்கு முந்தைய மரபுப் பரிசோதனைகள் செய்யும் வழக்கம் வந்து விட்டது. (எ.கா) சிக்கில் செல் அனீமியா (Sickle cell anemia) மிகுந்துள்ள மேற்கு ஆப்பிரிக்க நாட்டு மக்கள் மற்றும் கிழக்கு ஐரோப்ப அஷ்கெனாசி (Ashkenazi) பின்னணி உடைய யூதர்கள் இடையே திருமணத்திற்கு முந்தைய மரபுப் பரிசோதனைகள் செய்யும் வழக்கம் காணப்படுகிறது.

மரபியல், செவிலியம், உயிரியல், பொது சுகாதாரம், உளவியல் போன்ற பல்வேறு துறைகளில் பட்டப்படிப்பும் கலந்தாய்வில் அனுபவமும் உள்ளவர்கள் மரபியல் கலந்தாய்வு பணியாளர்களாகப் (Genetic counselor) பணியாற்றுகிறார்கள்.

Remove ads

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads