மரபு வியட்நாமிய நடனம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மரபு வியட்நாமிய நடனம் (Traditional Vietnamese dance) அரங்கு நடனம், இசைக்கூத்து நடனம், விழாக்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் ஆடும் நடனம், வேந்தவை (அரசவை) நடனம் ஆகிய அனைத்துவகை வியட்நாமிய நடன வடிவங்களையும் உள்ளடக்கும். பழங்காலத்தில் இருந்தே நடனம் வியட்நாமியப் பண்பாட்டின் ஒருங்கிணைந்த கூறுபாடாக விளங்கி வருகிறது. இது தோங் சோன் முரசுகளின் பொறிப்புகளில் இருந்து தெளிவாகிறது.
வியட்நாமில் 54 இனக்குழுக்கள் அமைந்துள்ளன. இவற்றில் கின் எனப்படும் இனக்குழு வியட்நாம் மக்கள்தொகையில் பெரும்பான்மையாக அமைந்துள்ளது. இக்கட்டுரையில் கின் இனக்குழுவின் நடனங்களே கவனத்தில் கொள்ளப்படுகிறது. என்றாலும் மற்ற வியட்நாம் இனக்குழு மக்களும் வளமான நடன மரபுகளைக் கொண்டுள்ளனர்.
Remove ads
வியட்நாமிய அரங்கு. இசைக்கூத்து நடனங்கள்
வியட்நாமிய அரங்கும் வியட்நாமிய இசையும் வியட்நாமிய நடனமும் பின்னிப் பிணைதே அமைகின்றன. மக்கள் அரங்கு வடிவங்களான தொப்பித் துவோங்கும் தொப்பிச் சேயோவும் சாய் உலுவோங்கும் நடனக்கூறு வகைகளே . மற்றச் சிறப்பு நடனப் பானிகள் போலன்றி, இவை விதிகள் ஏதுமின்றிக் கட்டற்ற முறையில் நிகழ்த்தப்படுகின்றன.
விழா, சிறப்பு நிகழ்ச்சி நடனங்கள்
முதன்மைக் கட்டுரை: சிங்க நடனம்
சிங்க நடனம் சீனாவில் இருந்து வியட்நாமுக்கு வந்த நடன வடிவமாகும். என்றாலும் இங்கு இது தனக்கே உரிய தனித்த பாணியைக் கொண்டுள்ளது.இது தியேத் எனப்படும் நிலாப் புத்தாண்டு, தியேத் திரங் தூ எனப்படும் இடைக்குளிர்கால விழா, போன்ற மரபான விழாக் கொண்டாட்டங்களில் ஆடப்படுவதோடு புதிய வணிகம் தொடங்கும்போதும் நிகழ்த்தப்படும். இந்த சிங்க நடனம் கெட்ட ஆவிகளையோட்டு குறியீட்டுத்தன்மை மிக்கது. இதில் பல பாணிகள் உண்டு. இது மற்போர்க் கலைஞரோடும் வட்டரங்குக் கலைஞரோடும் நிகழ்த்தப்படும்.
Remove ads
வேந்தவை (அரசவை) நடனங்கள்
திரான் பேரரசு முதல் நிகுயேன் பேரரசு வரை தொடர்ந்த அரசவை இசையான நா நாசுடன் பல நுட்பமான நடனங்கள் வியட்நாமிய பேரரசு அவைகளில் நிகழ்ந்துள்ளன. நா நாசு என்றால் நயமான இசை என்பது பொருள்.நா நாசு இசை தோன்றுவதற்கு முன்பே வேந்தவை நடன்ங்கள் இருந்தவை என்றாலும், இன்று பேரளவில் நிலைத்திருப்பது நிகுயேன் பேர்ரசு கால வடிவமே. இந்நடனம் நா நாசு இசையோடு நிலவும் மாந்தரின அரிய வாய்மொழி மரபுகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசவை நடனங்கள் பெருநுட்பம் கோருபவை. இவ்வகை நடனக் கலைஞர்கள் ஆடம்பரமான பலவண்ன ஆடைகளை அணிகின்றனர். நடப்பில் இவை மரபுக் கலைகளை வளர்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலோ குவே (மூவா சங் தின் குவே (múa cung đình Huế) – அரசவை நடனம்)விழாக்களிலோ மரபுக் கலை நிகழ்ச்சிகளிலோ நிகழ்த்தப்படுகின்றன. மிகவும் பெருவழக்கில் உள்ள அரசவை நடனங்கள் பின்வருமாறு:
- விசிறி நடனம் - vũ phiến
- விளக்கு நடனம் - lục cúng hoa đăng
- தாமரை நடனம் - múa sen, múa bài bông
- கொடி நடனம்
- தட்டு அல்லது கேடய நடனம் - múa mâm
- மெழுகுவத்தி நடனம்
- நறும்புகை நடனம் (Incense dance)
- தொப்பி நடனம் - múa nón
- தலைவார் நடனம்
- சிங்க நடனம் -múa lân
- வண்ணவார் (Ribbon) நடனம்
மூவா( "múa") என்பதன் பொருள் விரிவடைந்து மூவா உரோய் நியுவோசு ( Múa rối nước) எனும் நீர்ப் பாவைக்கூத்து நடனத்தையும் குறிப்பிடும்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads