மரவள்ளிக் கிழங்கு சீவல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மரவள்ளிக் கிழங்கு சீவல் அல்லது மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ் (சில்லுகள்) மரவள்ளிக் கிழங்கை சன்னமாக நறுக்கி எண்ணெயில் நன்கு பொறித்துத் தயாரிக்கப்படுகிறது. பொதுவாக, தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் காணப்படும் இது, இந்தோனேஷியாவில் க்ரிபிக் (Kripik) என்றழைக்கப்படுகிறது. இது மது, கால்நடை தீவனம், இயற்கை எரிபொருள் மற்றும் மாவு தயாரிக்கவும் பயன்படுகிறது.
Remove ads
முன்னுரை
மரவள்ளிக் கிழங்கின் தோலையும் பட்டையையும் நீக்கிவிட்டு, தேங்காய் எண்ணெயில் பொறித்தெடுக்கப்பட்டு, உப்பு, மிளகாய்ப் பொடி தூவப்பட்டு பரிமாறப்படுகிறது.[1]
மரவள்ளிக் கிழங்கிலிருந்து செய்யப்படும் சீவல்களை விட, மரவள்ளிக் கிழங்கு மாவிலிருந்து (Tapioca) தயாரிக்கப்படும் சீவல்களை நீண்ட நாள் சேமித்து வைக்க முடியும்.[2] இவை தெருவோரக் கடைகளிலும் விற்கப்படுவதுண்டு.[3]
சில நிறுவனங்களால் இவை பெரியளவில் உற்பத்தி செய்யப்பட்டு, பொட்டலங்களாக வணிகம் செய்யப்படுகிறது.[4]
Remove ads
வேறுபாடுகள்
இந்தியா மற்றும் இலங்கை
கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, இலங்கையில் இவை பெருமளவில் காணப்படுகின்றன. மற்ற சீவல்களை விட இது மிகவும் மொறுகலாகவும், மாவுச் சத்து நிறைந்ததாகவும், சுவையானதாகவும் உள்ளது. உப்பு, மிளகாய்ப் பொடி தூவியும் அல்லது தூவாமலும் உண்ணப்படுகிறது.[5]
க்ரிபிக்
க்ரிபிக் சிங்காங் என்பது, மரவள்ளிக் கிழங்கை சன்னமாக நறுக்கி எண்ணெயில் நன்கு பொறித்துத் தயாரிக்கப்படுகிறது.[6] சில நிறுவனங்களால் இவை பெரிய அளவில் உற்பத்தி செய்யப்பட்டு, பொட்டலங்களாக வணிகம் செய்யப்படுகிறது.[7] க்ரிபிக் பலேடோ (Balado (food))[8] அல்லது க்ரிபிக் சஞ்சை (Keripik sanjay) க்ரிபிக்குடன் சூடாக, காரசாரமாக, சர்க்கரை, மிளகாய் சேர்த்து செய்யப்படுவதாகும். இது மேற்கு சுமத்ராவின் புக்கிடிங்கி நகரின் சிறப்பாகும்.
Remove ads
மரவள்ளிக் கிழங்கு சீவல் வணிகம்
மரவள்ளிக் கிழங்கு சீவல்கள் மற்றும் துண்டுகள், மொத்தமாக உற்பத்தி செய்யப்பட்டு, மது, இயற்கை எரிபொருள் மற்றும் மாவு தயாரிக்க பயன்படுகிறது.[9][10][11] கேரளா மற்றும் சென்னையில் கால்நடை தீவனமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு எண்ணெயில் பொறித்தெடுக்காமல், வெளிப்புறத் தோலை நீக்கி, காய வைத்து, துண்டுகளாக நறுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.[12]
மேலும் படிக்க
- · Whitworth, Joseph Janes (October 24, 2014). "Hydrocyanic acid forces recall of Tapioca chips". Food Quality News. Retrieved January 27, 2018.
வெளி இணைப்புகள்
"Manioc, a Sri Lankan all Time Favourite". Ankierenique.wordpress.com
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads