மராத்திய மைசூர் போர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மராத்திய-மைசூர் போர்கள் (Maratha–Mysore Wars) மராத்தியப் பேரரசின் பேஷ்வா படைகளுக்கும், மைசூர் இராச்சியத்தின் ஐதர் அலி மற்றும் திப்புசுல்தான் தலைமையிலான படைகளுக்கும் 1785 முதல் 1787 முடிய நடைபெற்ற போர்களாகும். இப்போர்களில் மராத்தியப் படைகள் வெற்றி பெற்றது. இப்போரில் ஐதராபாத் இராச்சியம் நடுநிலை நிலை வகித்தது.
சனவரி 1787-இல் மராத்தியர்கள் பகதூர் பெண்டா முற்றுகைக்குப் பிறகு, மைசூர் படைகள் தோல்வியை ஒப்புக் கொண்டதுடன், திப்புசுல்தான் கஜேந்திரகாட் அமைதி உடன்படிக்கையை ஏப்ரல் 1787-இல் ஏற்றார். இவ்வுடன்படிக்கையின்படி, திப்புசுல்தான், மராத்தியர்களுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 12 இலட்சம் கப்பம் செலுத்தவும், மராத்தியர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை கைவிட்டு, பிரித்தானிய கிழககிந்தியக் கம்பெனி படைகளுக்கு எதிராக களம் இறங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.[3][2]
Remove ads
போருக்கு பிந்தைய உடன்படிக்கைகள்
ஏப்ரல் 1787-இல் மராத்திய-மைசூர் போர்கள் முடிவுற்றதுடன், கஜேந்திரகாட் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, மைசூர் மன்னர்திப்புசுல்தான் மராத்தியர்களுக்கு ரூபாய் 4.8 மில்லியன் போர் நட்ட ஈட்டு தொகை செலுத்தவும்; ஆண்டுதோறும் ரூபாய் 1.2 மில்லியன் கப்பம் செலுத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. மேலும் ஐதர் அலியால் கைப்பற்றப்பட்ட அனைத்து நிலப்பரப்புகளையும் மீண்டும் மராத்தியப் பேரரசுக்கே திரும்ப ஒப்படைக்கப்பட்டது.[6][7]மேலும் ஐதர் அலி மராத்தியர்களுக்கு செலுத்தத் தவறிய நான்காண்டு கப்பத்தொகையை முழுவதும் திப்பு சுல்தான் செலுத்த ஒத்துக்கொண்டார்.[8]
Remove ads
ஆதார நூற்பட்டியல்
- Duff, James Grant. A history of the Mahrattas, Volume 2
- Kumar, Raj. Essays on modern India
- Sen, Sailendra Nath. Anglo-Maratha relations, 1785-96
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads