மரியா கொரினா மச்சாடோ

வெனிசூலா நாட்டு அரசியல்வாதி மற்றும் செயற்பாட்டாளர் From Wikipedia, the free encyclopedia

மரியா கொரினா மச்சாடோ
Remove ads

மரியா கொரினா மச்சாடோ பாரிகா (María Corina Machado Parisca; பிறப்பு: அக்டோபர் 7, 1967) என்பவர் வெனிசுலா (வெனிசுவேலா) நாட்டின் அரசியல்வாதியாகவும், தொழில்துறை பொறியாளராகவும் உள்ளார். அக்டோபர் 2025 இல், இவருக்கு வெனிசுலா மக்களின் மக்களாட்சி உரிமைகளை மேம்படுத்தவும், சர்வாதிகாரத்திலிருந்து மக்களாட்சிக்கு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்காகவும் போராடுவதற்காக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[1] வெனிசுலா எதிர்க்கட்சியின் ஒரு முக்கிய தலைவரான இவர், 2011 முதல் 2014 வரை வெனிசுலாவின் தேசிய சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி உள்ளார்.[2]

விரைவான உண்மைகள் மரியா கொரினா மச்சாடோMaría Corina Machado, மிராண்டா தொகுதிக்கான தேசியப் பேரவை உறுப்பினர் ...

வெனிசுலா எதிர்க்கட்சியின் வலதுசாரி உறுப்பினரான இவர், தன்னை ஒரு மையவாதியென்றும் தாராளமயவாதி என்றும் விவரித்துள்ளார்.[3][4] வெனிசுலாவில் தேர்தலின்போது வாக்குகளைக் கண்காணிக்கும் அமைப்பான சூமாட்டேவின் நிறுவனராக மச்சாடோ தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் வென்டே வெனிசுலா (வெனிசுலாவுக்கு வாருங்கள்) என்ற அரசியல் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக உள்ளார். 2012 ஆம் ஆண்டு எதிர்க்கட்சியின் அதிபருக்கான முதன்மைத் தேர்தலில் இவர் போட்டியிட்டபோதிலும், என்றி கேப்ரில்சு என்பவரிடம் தோல்வியடைந்தார். 2014 ஆம் ஆண்டு நடந்த வெனிசுலா போராட்டங்களின்போது, ​​மதுரோவின் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைப்பதில் இவர் முக்கியப் பங்காற்றினார்.[5]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads