மருத்துவத் தமிழ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
'மருத்துவத் தமிழ்' என்பது மருத்துவத் துறைசார் தகவல்களைத் துறைசாரிடத்தும் பொதுமக்களிடத்தும் பகிரப் பயன்படும் தமிழ் ஆகும். மருத்துவத்துறை ஆக்கங்கள் நெடுங்காலமாகத் தமிழில் உண்டு. குறிப்பாகச் சித்த மருத்தவக் குறிப்புகள் தமிழிலேயே முதன்மையாக இருக்கின்றன. நவீன மருத்துவம் தொடர்பான ஆக்கங்களும் ஓரளவு விரிவாகத் தமிழில் வெளி வந்துள்ளன.
Remove ads
மருத்துவத் தமிழின் தேவை
நோய்களைப் பற்றிய அடிப்படைத் தகவல்களை மக்கள் அவர்கள் மொழியில் புரிந்து கொள்வது மிகவும் இன்றியமையாத்தாகும். வருமுன் காப்பதற்கும், வந்தாலும் நலப் படுத்துவதற்கும் இது தேவை. இதற்கு அடிப்படை மருத்துவக் கல்வியறிவு இருக்க வேண்டும். மருத்துவர்கள் நோய்களைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் தாய்த் தமிழ் மொழியில் ஆவணங்களாகப் பதிவு செய்யவும் மக்களிடையே பகிரவும் வேண்டும். ஆங்கிலத்தில் மட்டுமே மருத்துவக் கல்வி பெற்றால் இதைச் செயவது கடினமானதாக இருக்கும். இதனை எழுத்தாளர் ஜெயமோகன் பின்வருமாறு விமர்சிக்கிறார்.
“ | அவர்கள் மருத்துவத்தை ஆங்கிலத்திலேயே கற்பதனால் அவர்களுக்கு எளிமையாக தமிழில் மருத்துவத் தகவல்களைச் சொல்லும் பழக்கமே கிடையாது. தொலைக்காட்சிப் பேட்டிகளில் பிரபல மருத்துவர்கள் பேசுவதைக் கேட்டால் இதை உணரலாம். ”ஆக்சுவலி இந்த நெர்வ் நம்ம ஸ்பைனல் கார்டுக்குள்ளே இருந்து ஸ்கல்லுக்குள்ள எண்டர் பன்றப்ப இட் ஹேஸ் எ ஸ்மால் ஸ்டிரிக்ஷன் ஆன் தேட் பிளேஸ்…ஸோ…”. இவர்கள் அந்த நோயாளிக்கு எதைச் சொல்லிப்புரிய வைப்பார்கள்?.... வேறு எந்த இடத்தை விடவும் அரைவேக்காட்டு மருத்துவம் தமிழ் நாட்டில் கொடிகட்டிப் பறப்பதற்கு நமது நவீன மருத்துவர்களின் ஆணவமும் உயர்வற்க தோரணையுமே காரணம். | ” |
Remove ads
தமிழ் மருத்துவ நூல்கள்
தமிழில் பல தொன்மையான மருத்துவ ஏடுகள் உண்டு. இவற்றுள் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் முன்னெடுத்த உலகின் நினைவகம் திட்டத்திற்கு இந்தியாவின் பங்களிப்பாக 1997ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தின் தமிழ் மருத்துவச் சுவடித் தொகுப்பு மிகவும் முக்கியமானதாகும்.
நவீன மருத்துவத் தமிழின் தந்தையான திரு.சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் என்ற அமெரிக்கர் கருதப்படத்தக்கவர். இவர் 1850 களில் நவீன மருத்துவத்தை யாழ்ப்பாணத்தில் தமிழில் கற்பித்தார். இதற்கு உதவியாக இருபதுக்கும் மேற்பட்ட மருத்துவ நூல்களைத் தமிழில் எழுதி வெளியிட்டார்.[2]
தமிழ்நாட்டில் திரு.ஜெகந்நாத நாயுடு, சரீர வினா விடை (A catechism of Human Anatomy and Physiology) என்ற பெயரில் வினா விடை வடிவில் மருத்துவ நூலை மொழிபெயர்த்து 1865 ம் ஆண்டில் வெளியிட்டார். திரு.சாப்மன் என்பவர் மனுச அங்காதி பாதம் என்ற மொழிபெயர்ப்பு நூலை வெளியிட்டார். 1886 ஆம் ஆண்டில் திரு.வெ.ப.சுப்பிரமணிய முதலியார் 'கால்நடையியல்' (Veterinary Science) என்ற நூலை தமிழாக்கம் செய்தார்.[2]
'மருத்துவக் களஞ்சியம்' என்ற பன்னிரண்டு நூற்கள் அடங்கிய தொகுதியை, 1990 களில் 'தமிழ் வளர்ச்சிக் கழகம்' வெளியிட்டது. இந்தக் கழகம் சித்த மருத்துவத்தைப் பற்றிய நூற்களையும் வெளியிட்டுள்ளது.
'அடையாளம்' நூல் வெளியீட்டகம் வெளியிட்டிருக்கும் விவாக்கப்பட்ட புதிய பதிப்பான 'டாக்டர் இல்லாத இடத்தில்', 'தி மோயோ கிளினிக்-உடல்நலக் கையேடு' ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும். மருத்துவர் ஐ. எஸ். ஜெயசேகர் எழுதிய 'நரம்பு மண்டல நோய்கள்', 'சிறுநீரக நோய்களும் மருத்துவமும்', 'சீரண மண்டல நோய்கள்' ஆகியனவும் பிற நூல்களும் குறிப்பிடத்தக்கவை.
Remove ads
தமிழில் மருத்துவக்கல்வி
இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சித்த மருத்துவப் பட்டப் படிப்பை மேற்கொள்ளப் பயிற்று மொழியாகத் தமிழ் வைக்கப் பட்டுள்ளது
நவீன மருத்துவக் கல்விப் பாடத் திட்டங்கள் முழுவதையும் தமிழ் வழியில் அமைப்பதற்காக டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ தமிழ் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது.[3]
மருத்துவத் தமிழிற்கு ஆய்விதழ்கள் இல்லாமை
தற்காலத்தில், மருத்துவம் தொடர்பான செய்தி மாத இதழ்கள் சில, தமிழில் வெளியடப் பட்டு வருகின்றன. ஆனால் மருத்துவம் தொடர்பான ஆய்விதழ்கள் தமிழில் இல்லை. சித்த மருத்துவ ஆய்வுகள் பற்றியும் இதழ்கள் எதுவும் இல்லை. தற்கால மருத்துவ அறிவியலுக்கு ஈடுகொடுக்க மருத்துவ ஆய்விதழ்கள் இல்லாதது மருத்துவத் தமிழுக்கு ஒரு பெருங் குறையாகும். தற்காலத்தில் தமிழகத்தில், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், இயற்கை மூலிகைய் மருத்துவம் ஆகிய துறைகளில் மருத்துவர்களும் வல்லுநர்களும் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். எனினும் இத்துறைகளைப் பற்றிய அடிப்படைத் தகவல்களும் ஆய்வு முடிவுப் பதிவுகளும் அவர்களால் மேற்கொள்ளப் படவில்லை. மேலும் இத்தவகல்கள், முறைப் படுத்தல் மற்றும் ஆவணப் படுத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப் பட்டு வைக்கப் படவில்லை.
Remove ads
மருத்துவத் தமிழ் மீது விமர்சனங்கள்
தமிழில் மருத்துவக் கல்வியைக் கற்றல், தொடர் துறைசார் கல்விக்குத் தடையாக இருக்கும் எனும் ஒரு பொதுக் கருத்து, ஆங்கில மருத்துவத துறை சார்ந்த வல்லுநர் பலராலும் முன்வைக்கப் ப்படுகிறது. அதி நவீன மருத்துவ தகவல்களும் ஆய்வு மற்றும் செயன்முறை ஆவணங்களும் ஆங்கிலத்திலேயே இருப்பது தற்போதைய நிலையாகும். அவற்றைத் தமிழில் தொகுப்பதற்கும் மொழி பெயர்ப்பதற்கும் ஆவணப் படுத்துவதற்கும் அடிப்படை வளங்கள் போதுமான அளவில் இல்லாமை, தமிழ்வழி மருத்துவக் கல்வியைத் தருவதற்கு ஒரு பெரும் தடையாக உள்ளது. மருத்துவ முதுகலைப் பட்டப் படிப்புகளுக்கும் மேற்பயிற்சிகளுக்கும் தொடர் மருத்துவக் கல்விக்கும் இது மிகப் பெரிய தடையாக இருக்கும் என அவரகளால் கருதப்படுகிறது.
Remove ads
இவற்றையும் பார்க்க
- சிவசுப்ரமணிய ஜெயசேகர்
மேற்கோள்கள்
உசாத்துணைகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads