மர நாள்

தாவர இனம் From Wikipedia, the free encyclopedia

மர நாள்
Remove ads

மர நாள் (Arbour Day; arbor = மரம்) என்பது உலகெங்கும் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாள். இந்நாளில் தனி ஆட்களும் குழுக்களும் மரங்களை நட்டு, மரங்கள்பால் அக்கறை கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர். இப்போது பல நாடுகள் இந்நாளைக் கொண்டாடுகின்றன. வழக்கமாக இது இளவேனில் பருவத்தில் கொண்டாடப்பட்டாலும், காலநிலையைப் பொறுத்தும் தகுந்த மரம் நடும் நேரத்தைப் பொறுத்தும் இந்நாள் வேறுபட்ட நாட்களில் கொண்டாடப்படுகிறது.

விரைவான உண்மைகள் மர நாள்மரம் நடுநாள் Arbour day, கடைப்பிடிப்போர் ...
Remove ads

தோற்றம்

Thumb
உலக முதல் மரம் நடும் நாளன்று இயற்கையியலாளர் மைகேல்ஃஎராரோ உசேடா, வில்லனுஏவா தெ லா சீர்ரா (எசுப்பானியா) 1805.

உலக முதல் மர நாள்

உலகிலேயே முதல் மர நாள் எசுப்பானியச் சிற்றூரான வில்லனியேவா தெ சீராவில்]] 1805இல் அவ்வூர் பாதிரியாரால் ஊர்ப்பொதுமக்களின் முழு ஒத்துழைப்புடன் தொடங்கப்பட்டது.[1]

தனது பேராசையால் நெப்போலியன் ஐரோப்பாவை முற்ருகையிட்டுக் கொண்டிருந்த வேளையில் சிரா தெ காதா எனும் இந்த ஊரில் வாழ்ந்த டான் இராமோன் வாசாசு உரோக்சோ நலவாழ்வுக்கும் தூய்மைக்கும் அழகுக்கும் இயற்கை வளத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் மரங்களின் இன்றியமையாமையை உணர்ந்ததால் விழாப்போல மரம் நடத் தீர்மானித்துள்ளார். இந்த விழா திருப்பேரவையின் பெரிய, நடு மணிகள் முழங்க, கொண்டாட்டச் செவ்வாயன்று தொடங்கியுள்ளார். மக்களும் திருப்பேரவை உடையில் இராமோனும் அவையலுவலரும் ஆசிரியரும் சுற்றியிருந்த பெருந்திரள்ளனவரும் முதல் மரத்தை எழிடோ கணவாயில் நட்டுள்ளனர். மரநடல் பிறகு அர்ரோயாடா, ஃபியூவெந்தெ தெ லா மோரா ஊர்களைல் தொடர்ந்து நிகழ்ந்துள்ளது. பிறகு இதைத் தொடர்ந்து விருந்தும் நடனமும் நட்ந்தேறியுள்ளன. விருந்தும் விழாவும் மூன்று நாட்கள் நடந்தன. மரங்களின் காப்புக்கான கொள்கையறிக்கையை உருவாக்கி சூழவுள்ள நகர்களுக்கு அனுப்பி இயற்கை மூது அன்பும் மதிப்பும் கொள்ளுமாறும் அதற்காக அவரவர் இடங்களில் மரங்களை நடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Miguel Herrero Uceda, Arbor Day

முதல் அமெரிக்க மர நாள்

Thumb
பர்டுசே நார்த்ரோப்

முதல் அமெரிக்க மர நடல் நெபார்சுகா நகரத்தில் ஜூலியசு சுட்டெர்லிங் மார்ட்டன் என்பவரால் 1872 ஏப்பிரல் 10-இல் தொடங்கப்பட்டுள்ளது. அப்போது ஒரு மில்லியன் மரங்கள் நெபார்சுகாவில் நடப்பட்டுள்ளன.[2]

மர நாலை உலகமயப்படுத்திய முயற்சி கனக்டிகட்டைச் சேர்ந்த பர்டுசே நார்த்ரோப்பையே சாரும். இவர் 1883இல் ஜப்பானுக்கு வருகைபுரிந்து மர நாள் பற்றியும் ஊரக வளர்ச்சி பற்றியும் உரையாற்றியபோது இந்நிகழ்வு தொடங்கியது. அதே ஆண்டில் அமெரிக்க கானியல் கழகம் மர நாள் பரப்புரைக் குழுவின் தலைவராக நார்த்ரோப்பை அமர்த்தி தேசிய அளவில் மர நாள் கொண்டாட்டத்தைப் பரப்பியது. மேலும் இவர் மர நாள் கொண்டாட்ட ஆர்வத்தை ஆசுத்திரேலியா, கனேடா, ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கும் பரப்பினார்.[3]

இலங்கை

நவம்பர் 15இல் தேசிய மர நடுநாள் கொண்டாடப்படுகிறது.

தான்சானியா

ஏப்பிரல் 1இல் தேசியமரம் நடுநாள் கொண்டாடப்படுகிறது.

உகாண்டா

மார்ச் 24இல் தேசியமரம் நடுநாள் கொண்டாடப்படுகிறது.

பிரித்தானியா

இந்நாள் 1975 முதல் தேசிய மர வாரம் குளிர்கால மரம் நடும் பருவத்தில் கொண்டாடப்படுகிறது. பள்ளிகளும் மக்கள் இயக்கங்களும் உள்ளூராட்சித் துறையினரும் ஒரு மில்லியன் மரங்களை இவ்வாரத்தில் ஒவ்வோராண்டும் நடுகின்றனர்.

வெனிசுவேலா

வெனிசுவேலா மே மாதம் கடைசி ஞாயிறன்று "Día del Arbol" என மர நாளைக் கொண்டாடுகிறது.

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads