மறை வெப்பம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வெப்பவேதியியலில், மறை வெப்பம் (latent heat) அல்லது உள்ளுறை வெப்பம் என்பது, ஒரு வேதிப்பொருள் திண்மம், நீர்மம், வளிமம் ஆகிய நிலைகளில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு (அதே வெப்பநிலையில்) மாறும்போது உறிஞ்சப்படும் அல்லது வெளியிடப்படும் வெப்ப ஆற்றலாகும்.எடுத்துக்காட்டாக, பனிக்கட்டி உருகி நீராகும் போதும், நீர் கொதித்து ஆவியாகும் போதும் வெப்பநிலையில் மாற்றம் இன்றியே வெப்ப ஆற்றல் உள்ளிழுக்கப்படும். தற்காலத்தில் இது உள்ளீட்டு வெப்பம் (enthalphy) என்றும் அழைக்கப்படுகிறது.

மறைவெப்பத்தில் பொதுவாக வழங்கப்படுவது இரண்டு வகைகள். ஒன்று உருகல் மறை வெப்பம் ஆகும்; இங்கே திண்மப் பொருள் நீர்ம நிலைக்கு மாறும். மற்றது, ஆவியாதல் மறை வெப்பம்; இங்கே நிலை மாற்றம் நீர்மத்தில் இருந்து வளிமம் என்றாகும். இந் நிலை மாற்றங்கள் அகவெப்ப மாற்றங்கள் எனப்படுகின்றன. அதாவது இம் மாற்றங்களின்போது வெப்பம் உள்ளிழுக்கப்படுகின்றது. இதே மாற்றம் எதிர்த் திசையில்: வளிமம் → நீர்மம் → திண்மம் என்று அமையும்போது வெப்பம் வெளியிடப் படுவதனால், அது புறவெப்ப மாற்றம் எனப்படும்.

Remove ads

மறை வெப்ப அட்டவணை

உள்ளுறை வெப்பம் [latent (heat) = Potentially existing but not presently evident or realized - wordweb dictionary]

மேலதிகத் தகவல்கள் பதார்த்தம், உருகல் மறை வெப்பம் ஜூ/கி (J/g) ...
Remove ads

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads