மலக்குகள்

From Wikipedia, the free encyclopedia

மலக்குகள்
Remove ads

இசுலாத்தில் மலக்குகள் ( அரபி: ملائكة மலாஇகா; ஒருமை: ملاك மலக்கு) என்பவர்கள் அல்லாவின் படைப்பினங்களில் ஒன்று. ஒளியினால் படைக்கப்பட்டவர்கள். மனிதர்களால் காணவியலாது. இவர்கள் தங்களின் விருப்பப்படி எதுவும் செய்வதில்லை. அல்லாவின் கட்டளைக்கு அப்படியே அடிபணியக்கூடியவர்கள்.

Thumb
கபிரியேல் தேவதூதர் ('The Wonders of Creation and the Oddities of Existence' இலிருந்து, எகிப்து/சிரியா 1375-1425 கிபி.[1]

பல்வேறுபட்ட காரியங்களுக்காக அவற்றை நிறைவேற்ற அல்லாவால் பணிக்கப்பட்ட மலக்குகள் உள்ளன. எடுத்துக்காட்டாக,

  • ஜிப்ராயீல் (அலை) - வஹீ என்னும் இறைச் செய்திகளை கொண்டு வரும் மலக்கு
  • மீக்காயீல் (அலை) - மழை கொண்டு வரும் மலக்கு

வானவர்களின் பணிகள்:

1* இறை தூதின்(வஹி) பொறுப்பு.-வானவர் தேவதூத தலைவர் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இறைதூதர்களுக்கு (நுபுவ்வத் என்னும்) தூதுவச் செய்திகளை கொண்டு வருவதே இவர்களின் பணியாகும்.

2* மழை, காற்றின் பொறுப்பு.- இதன் பொறுப்பாளர் வானவர் மீக்காயீல். இவர் மழை, காற்று,மரம் செடி கொடிகள் முதலானவற்றுக்குப்; பொறுப்பாளர் ஆவார்.

3* சூர் (எக்காளம்)ஊதுவதின் பொறுப்பு.- இதன் பொறுப்பாளர் இஸ்ராஃபீல் (அலை).

4*உயிரைக் கைப்பற்றும் வானவர். (மலக்குல் மவ்த்) உயிரைக்கைப்பற்றும் வானவருக்கு மலக்குல் மவ்த் எனக் குர்ஆன் கூறுகிறது. இவர்கள் பெயர் இஸ்ராயீல் என்று சொல்லப் படுகிறது.

7,8*மனிதனின் நன்மை தீமைகளை பதிவு செய்யும் வானவர்- வலது பக்கமும் இடது பக்கமும் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ‘ரகீபுன் அத்தீத்’இது அவர்களின் பெயர்களல்ல. அவர்களின் பண்புப் பெயர்களாகும். ‘கிராமன் காத்திபீன்’ கண்ணியத்திற்குரிய எழுத்தாளர்கள் என்று அல்லாஹ்வே சிறப்பிக்கிறான்.(82;:12)

5,6* கப்ரில் (மண்ணறையில்) வருகை தரும் வானவர்கள்.- இவர்களின் பெயர்கள் முன்கர்,நக்கீர்.

9*சுவர்க்கத்தின் காவலர்கள் (خزنة الجنة ) -அதன் தலைவர் ரிழ்வான் ஆவார்கள்,

10* நரகின் காவலர்கள் (خزنة جهنم)-அதன் தலைவர் மாலிக் ஆவார்

இது அல்லாது கணக்கற்ற மலக்குகள் உள்ளனர்.


Remove ads

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads