மலேசியத் தமிழ்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மலேசியத் தமிழ் (Malaysian Tamil) அல்லது மலேயாத் தமிழ் என்றழைக்கப்படும் இம்மொழி மலேசியாவில் பேசப்படும் ஒரு உள்ளூர் மாற்றுத் தமிழ் மொழி ஆகும்.[3] இது மலேசியா, மலாய் மற்றும் மாண்டரின் ஆகிய மொழிகள் இணைந்த மலேசியக் கல்வி மொழிகளில் ஒன்றாகும்.[4] [5] மலேசியத் தமிழர்களுக்கும் இந்தியத் தமிழர்களுக்கும் உள்ள சொல்லகராதியில் பல வேறுபாடுகள் உள்ளன.

விரைவான உண்மைகள் மலேசியத் தமிழ் மொழி, நாடு(கள்) ...
Remove ads

செல்வாக்கு

வணிகப் பரிவர்த்தனைகளை செய்வதற்காக ஒரு பொதுவான மொழியாக தமிழ் மொழியானது ஆரம்ப வணிகத்தில் தொடர்புடைய எல்லா பகுதியினராலும் புரிந்துகொள்ளப்படும் என்று பயன்படுத்தப்பட்டது. வரலாற்றாளர்களான சே.வி. செபாசிடியன், கே.டி. திருநாவுக்கரசு, மற்றும் ஏ.வி. ஏமில்டன் போன்றோர் வரலாற்று காலங்களில் மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் தமிழ் வர்த்தகம் பொது மொழியாக இருந்தது எனப் பதிவு செய்துள்ளனர். மலேசியாவின் சுமத்திரன் மற்றும் மலாய் தீபகற்பம் ஆகியவற்றில் கடல்சார்ந்த வணிகத்தில் தமிழின் முக்கியத்துவம் பல நூற்றாண்டுகளாகவும் மலாய் தீபகற்பத்தில் மலாய் மொழியிலும் 15 முதல் 19 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் வணிக ரீதியான நடவடிக்கைகள் காரணமாகத் தொடர்ந்தது. 17 ஆம் நூற்றாண்டில் டச்சு கிழக்கிந்திய நிறுவனம் அதன் கடிதத்தின் ஒரு பகுதியாக தமிழ் மொழியைக் கட்டாயப்படுத்தியது. 19 ஆம் நூற்றாண்டில் மலாக்கா மற்றும் பிற கடல் துறைகளில், மலாய் மொழியியல் தொடர்பான புத்தகங்கள் மற்றும் கணக்குப்பதிவேடு புத்தகங்கள் ஆகியவை பெரும்பாலும் தமிழில் இருந்தன.

தமிழ் மொழியில் இருந்து வந்த சில சொற்கள் மலாய் மொழியில் பயன்படுத்தப்படுகின்றன. அதைப் (சில சமயம் சமசுகிருதமயமாக்கல்) போன்ற அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சொற்களை பின்வருமாறு பட்டியலில் காணலாம்.

மேலதிகத் தகவல்கள் தமிழ், மலாய் ...
Remove ads

குறிப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads