மஹிமா சௌத்ரி
இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
மஹிமா சௌத்ரி (Mahima Chaudhry) 1973 செப்டம்பர் 13 அன்று பிறந்த ஒரு பாலிவுட் படங்களில் தோன்றும் ஒரு நடிகை மற்றும் முன்னாள் விளம்பர நடிகை ஆவார். 1990 இல் ஃபெமினா மிஸ் இந்தியா பட்டம் வென்ற பிறகு, சௌத்ரி பல தொலைக்காட்சி விளம்பரங்களில் திரைப்படங்களில் நுழைவதற்கு முன் தோன்றினார். அவர் பிலிம்பேர் விருதுகள் மற்றும் பிற விருதுகளைப் பெற்றார். அவர் "பர்தேஸ்" திரைப்படத்தில் படத்தில் அறிமுகமானார், அதற்காக அவர் சிறந்த பெண் அறிமுகத்திற்காக பிலிம்பேர் விருது]] வென்றார்.[2] திரைப்படங்களில் நடிப்பதல்லாமல் கூடுதலாக, சுற்றுப்பயணங்களிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார், மேலும் 2014 ரியாலிட்டி ஷோ "டிக்கட் டூ பாலிவுட் " க்கான திறமைசார் நீதிபதியாக இடம்பெற்றார். முகர்ஜிக்கு ஒரு மகள் இருக்கிறார்.
Remove ads
ஆரம்ப மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை
சௌத்ரி டார்ஜீலிங்கில் பிறந்தார். அவர் குர்ஸொங்கில் உள்ள டூ ஹில்லில் பத்தாம் வகுப்பு படித்தார், பின்னர் டார்ஜீலிங்கில் உள்ள லோரோட்டோ கல்லூரிக்குச் சென்றார்.[3] 1990 களின் ஆரம்பத்தில் மிஸ் இந்தியாவை வென்ற பிறகு தொலைக்காட்சி விளம்பரங்களில் அவர் தோன்றினார், பெப்சி விளம்பரத்தில் ஆமிர் கான் மற்றும் ஐஸ்வர்யா ராய் உடன் தோன்றியது மிகவும் புகழ்பெற்றது.
நடிப்பு வாழ்க்கை

1990 இல் மிஸ் இந்தியா பட்டம் வென்றார், அதன் பிறகு அவர் தனது நடிப்புத் தொழிலை தொடங்கினார். சௌத்ரி பல்வேறு பாத்திரங்களில் நடித்தார், "பர்தேஸ்" (1997) படத்தில் இல் ஒரு கிராமத்துப் பெண்ணாக நடித்திருந்தார்.
அநேக திரைப்படங்களைச் செய்ததை அடுத்து, கஜோல், ஷில்பா ஷெட்டி, அமீஷா பட்டேல், ஊர்மிளா மடோண்த்கர், மனிஷா கொய்ராலா, ரவீணா டாண்டன், ரேகா, பிரீத்தி சிந்தா, தபூ, பத்மினி கோலாபுரே, மற்றும் ஹேம மாலினி போன்ற திறமையான நடிகைகளுடன் அவர் பணிபுரிந்தார் . இதைப் பற்றி அவர் கேட்டபோது, அவர் மற்ற நடிகர்களுடன் பணிபுரிவதில் தான்மகிழ்ச்சியடைந்ததாகக் கூறி அவர் பதிலளித்தார், மேலும், ஜூஹி சாவ்லா, அவரது விருப்பமான நடிகைகளில் ஒருவர் என்றும் கூறினார்.
2010 இல் "புஷர்" படத்தில் நடித்ததின் மூலம் நட்சத்திர நடிகையானார்,[4] ஆசாத் ராஜா இயக்கிய அப்படத்தில் நகைச்சுவை நடிகர் மணி லியாகத் நாயகனாக நடித்திருந்தார். மேலும் இவர் ஓம் பூரி மற்றும் சஞ்சய் கபூர் ஆகியோர் உடன் நடிக்க "மும்பை - த கேங்ஸ்டர்" என்ற திகில்ப் படத்தில் பணியாற்றியுள்ளார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads