எட்வின் சாமுவேல் மாண்டேகு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எட்வின் சாமுவேல் மாண்டேகு (Edwin Samuel Montagu) (6 பிப்ரவரி 1879 – 15 நவம்பர் 1924) ஐக்கிய இராச்சியத்தின் லிபரல் கட்சியின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினராகவும், மூன்றாவது யூத இன அமைச்சராகவும் பணியாற்றியவர். 1917 மற்றும் 1922ஆம் ஆண்டுகளில் ஐக்கிய இராச்சியத்தின் இந்தியாவிற்கான செயலாளராகவும் இருந்தவர். ஐக்கிய இராச்சியத்தின் பிரிவி கவுன்சில் உறுப்பினராக செயல்பட்டவர்.

மாண்டேகு, பிரித்தானிய இந்தியாவின் இந்தியத் தலைமை ஆளுநர் செம்ஸ்போர்டுடன் இணைந்து, 1919ல் வெளியிட்ட மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் மூலம் நன்கறியப்பட்டவர்.[1] மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த, ஐக்கிய இராச்சியத்தின் நாடளுமன்றத்தில் இந்திய அரசுச் சட்டம், 1919 இயற்றப்பட்டது.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads