மாந்தக் கடத்துகை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாந்தக் கடத்துகை என்பது மனிதர்களை வணிக நோக்கத்திற்காக, குறிப்பாக கடத்துபவர் அல்லது மற்றவர்களின் பாலியல் அடிமைகள், கொத்தடிமைகள் ஆக வைக்க அல்லது பாலியல் தொழிலில் உட்படுத்துவதற்காகக் கடத்துவதாகும்.[1][2] கட்டாயத் திருமணம் புரியும் நோக்கத்துடன் மனிதர்களைக் கடத்துவதும் இதன் பாற்படும்.[3][4][5] இது தவிர, உறுப்புகள் மற்றும் திசுக்களை களவாடும் பொருட்டு கடத்துவதும்,[6][7] மற்றும் வாடகைத் தாயாக பயன்படுத்துவதற்காக மற்றும் கருப்பையைத் திருடுவதற்காக பெண்களைக் கடத்துவதும் மாந்தக் கடத்துகை ஆகும்.[8] மாந்தக் கடத்துகையானது குறிப்பட்ட நாட்டினுள்ளும் அல்லது நாடுகளுக்கிடையேயும் நடைபெறலாம். இது கடத்தப்படும் மனிதருக்கெதிரான குற்றமாகப் பார்க்கப்படுகிறது, ஏனெனில் கடத்தப்படுபவரின் இருப்பிட விருப்புரிமையானது, அவர்களைக் கட்டாயப்படுத்தி ஒரு வணிகப் பொருளாகப் பாவிப்பதின் மூலம் மீறப்படுகிறது. மாந்தக் கடத்துகை என்பது மனிதர்களை வைத்துச் செய்யும் வணிகமாகும். எனவே, ஒருவரை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்திக் கொண்டு செல்லாமல், வணிகப் பொருளாகப் பாவிக்கப்பட்டாலும் அதுவும் மாந்தக் கடத்துகை என்றே கருதப்படுகிறது. மாந்தக் கடத்துகையானது உலக அளவில் தோராயமாக ஆண்டுக்கு 31.6 பில்லியன் டாலர் அளவு பெருமானமுள்ள ஒரு வணிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.[9] நாடுகளுக்கிடையேயான குற்றவாளிகளிடையே வளர்ந்து வரும் முக்கிய குற்றங்களில் ஒன்றாக மாந்தக் கடத்துகை கருதப்படுகிறது.[10] இது உலக அளவில் ஒரு மனித உரிமை மீறலாகப் பார்க்கப்படுகிறது.[11]
Remove ads
அமெரிக்க & ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்தல்
ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சட்ட விரோதமாக குடியேற நினைப்பவர்களை, கடத்தல்காரர்கள் பலமடங்கு தொகை வசூலித்து, முறையற்ற முறைகளில் அழைத்துச் செல்கின்றனர்.[12][13]
வெளி இணைப்புகள்
உசாத்துணைகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads