மானாட மயிலாட

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மானாட மயிலாட என்பது இந்தியாவிலுள்ள தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் நடனப் போட்டி நிகழ்ச்சி ஆகும்.[1][2][3]

விரைவான உண்மைகள் மானாட மயிலாட, உருவாக்கம் ...

இந்நிகழ்ச்சி செப்டம்பர் 2007 முதல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடர் நிகழ்ச்சி ஆகும். ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகும். இப்பொழுது நான்காவது பாகம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது

வித்தியாசமான அரங்க அமைப்புகளாலும் அதற்கேற்ற விறுவிறுப்பான நடன அமைப்பினாலும் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களிடையே பிரபலமான நிகழ்ச்சி ஆகும்.

மழை பொழியும் அரங்கம், பனி பொழியும் அரங்கம், பாலைவனம், கடற்கரை, நீர்வீழ்ச்சி, சூரியகாந்திப் பூக்கள் தோட்டம், விமானம் மற்றும் விமான நிலையம் போன்ற அரங்க அமைப்புகள் பார்வையாளர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டன.

இது பிரித்தானியாவில் ஒளிபரப்பப்படும் மேற்கத்திய நடனப்போட்டி நிகழ்ச்சியான en: Strictly Come Dancing என்ற நிகழ்ச்சியின் தழுவல் ஆகும்.

Remove ads

நிகழ்ச்சியின் வடிவம்

இது பெரும்பாலும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்குபெறும் நடன நிகழ்ச்சி ஆகும். நடனப் போட்டியாளர்கள் இருவர், நடன இயக்குநர் ஒருவர் இணைந்து ஒரு குழுவாக போட்டியிடுவர். ஏறத்தாழ பத்து குழுக்கள் போட்டியில் பங்கு பெரும்.

போட்டியில் வெற்றி பெறும் முதல் இணைக்கு 10 இலட்சம் இந்திய ரூபாய்களும், இரண்டாவது மற்றும் மூன்றாவது இணைகளுக்கு முறையே 5 மற்றும் 3 இலட்சம் ரூபாய்களும் பரிசாக வழங்கப்படும்.

தொகுப்பாளர்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டுகள், பாகங்கள் ...

நடுவர்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டுகள், பாகங்கள் ...

நடன இயக்குநர்கள்

சந்தோஷ்(சேண்டி), பிரேம், மணி, ரமேஷ், சந்துரு, ரகு, பாலா, ஆண்டோ, ஸ்ரீநாத், ராஜேஷ்

இவர்கள் நடன இயக்குநர் கலாவின் கலாலயா நடனப் பள்ளியின் மாணவர்கள் ஆவர்.

Remove ads

வெற்றி பெற்றவர்கள்

மேலதிகத் தகவல்கள் பாகம், முதல் பரிசு ...

பாகம் 1

மானாட மயிலாட முதல் பாகத்தில் நடுவர்களாக நடன இயக்குநர்கள் கலா மற்றும் பிருந்தா சகோதரிகள் பங்கேற்றனர். இவர்களுடன் சிம்ரன் சில வாரங்களுக்கு நடுவராக இருந்தார். பின் சிம்ரன் மாற்றப்பட்டு நமீதா நடுவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இயக்குநர் கே.எஸ்.இரவிக்குமார் ஒரு வாரத்திற்கு மட்டும் நடுவராக வந்தார்.

இந்நிகழ்ச்சியில் நடிகைகள் மனோரமா, பூஜா, பிரியாமணி, சந்தியா மற்றும் கனிகா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மானாட மயிலாட வெற்றி விழாவில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற இணைகளுக்குப் பரிசுகள் வழங்கினார்.

போட்டியாளர்கள்

மேலதிகத் தகவல்கள் எண், இணை ...

நடனச் சுற்றுகள்

மேலதிகத் தகவல்கள் தேதி, சுற்று ...

பாகம் 2

மானாட மயிலாட இரண்டாம் பாகத்தில் கலா, குஷ்பு மற்றும் ரம்பா ஆகியோர் நடுவர்கள் ஆவர்.

போட்டியாளர்கள்

மேலதிகத் தகவல்கள் எண், இணை ...

நடனச் சுற்றுகள்

மேலதிகத் தகவல்கள் தேதி, சுற்று ...
Remove ads

பாகம் 3

மானாட மயிலாட மூன்றாம் பாகத்தில் கலா, குஷ்பு மற்றும் ரம்பா ஆகியோரே நடுவர்களாகத் தொடர்ந்தனர்.

போட்டியாளர்கள்

மேலதிகத் தகவல்கள் எண், இணை ...
Remove ads

பாகம் 4

மானாட மயிலாட நான்காம் பாகத்தில் கலா, குஷ்பு மற்றும் நமீதா ஆகியோர் நடுவர்கள் ஆவர்.

இந்தப் பாகத்தில் முதல் சில வாரங்களுக்குப் பின்னரே போட்டிக்கான இணைகள் தேர்வு செய்யப்பட்டனர். அதுவரை ஆண்-ஆண் மற்றும் பெண்-பெண் என்று ஒரு பாலினத்தாரே இணைந்து நடனம் ஆடினர்.

மனோ - சுகுமார் இணை நகைச்சுவை நிகழ்ச்சிகளை வழங்குவதற்காக, போட்டியாளர்களாக இல்லாமல் சிறப்பு இணையாக இந்த பாகம் முழுவதும் தொடர்கிறார்கள்.

போட்டியாளர்கள்

மேலதிகத் தகவல்கள் எண், இணை ...

நடனச் சுற்றுகள்

மேலதிகத் தகவல்கள் தேதி, சுற்று ...
  • சிங்கிள் ஜென்டர் எனப்படும் ஓரே பாலினத்தார் சுற்றின் போது நிவாஸ் - கிருத்திகா இணைக்காக சந்தோஷ் (எ) சேண்டி குழுவினர் இசையமைத்த புதிய மனாட மயிலாட தலைப்புப் பாடல் சிறப்பான வரவேற்பைப் பெற்றது.
  • 01 நவம்பர் 2009 அன்று ஆதவன் திருவிழா சிறப்பு சுற்றுக்கு ஆதவன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் கதாநாயகன் சூர்யா அகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
  • குழந்தைகள் தினச் சிறப்பு நிகழ்ச்சியில், ரஹ்மான் பச்சை முகமூடி மனிதன் வேடத்திலும், சௌந்தர்யா பொம்மை வேடத்திலும் ஆடி

சிறந்த நடனத்திற்கான பரிசைப் பெற்றனர்

Remove ads

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads