மான்டெர்ரே, கலிபோர்னியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மான்டெர்ரே நகரம் (City of Monterey) கலிபோர்னியா மாநிலத்தின் மையப் பகுதியில் அமைதிப் பெருங்கடலோரத்தில் மான்டெர்ரே வளைகுடாவின் தென் முனையில் அதே பெயருள்ள கவுண்டியில் அமைந்துள்ளது. கடல்மட்டத்திலருந்து 26 அடி (8 மீ) உயரத்தில் 8.47 ச.மைல் (21.9 ச.கி.மீ.) பரப்பளவில் அமைந்துள்ளது.,[2] 2010 ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இந்நகரத்தின் மக்கள்தொகை 27,810 ஆகும்.
மான்டெர்ரே 1777ஆம் ஆண்டிலிருந்து 1846 வரை ஆல்ட்டா கலிபோர்னியாவின் தலைநகரமாக எசுப்பானியா மற்றும் மெக்சிக்கோவின் ஆளுகையில் இருந்தது. கலிபோர்னியாவின் சுங்கம் கொண்ட ஒரே துறைமுகமாக விளங்கியது. 1846இல் சுங்கத்துறைக் கட்டிடம் மீது அமெரிக்கக் கொடி ஏற்றப்பட்டு கலிபோர்னியாவின் மீது ஐக்கிய அமெரிக்கா உரிமை கோரியது. கலிபோர்னியாவில் இந்த நகரத்தில்தான் முதல் நாடகமன்றம், பொதுக் கட்டிடம், பொது நூலகம்,பொதுத்துறைப் பள்ளி, அச்சிடும் கூடம், செய்தித்தாள் ஆகியன கட்டமைக்கப்பட்டன.19வது நூற்றாண்டு முதல் இந்நகரம் பல கலைஞர்களை ஈர்த்து வருகிறது. பல புகழ்பெற்ற எழுத்தாளர்களும் ஓவியர்களும் இங்கு வாழ்ந்துள்ளனர்.1950கள் வரை மீன்பிடித்தலும் முதன்மையாக இருந்தது.
இங்குள்ள மான்டெர்ரே வளைகுடா மீன் காட்சிக்கூடம், கேன்னரி ரோ, மீனவர் துறைமுகம் ஆகியன சுற்றுலாப் பயணிகளை கவரும் இடங்களாகும். ஆண்டுதோறும் நடத்தப்பெறும் மான்டெர்ரே ஜாசு இசைவிழாவும் பல வருகையாளர்களை ஈர்க்கின்றது.
Remove ads
மேற்சான்றுகள்
மேலும் அறிய
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads