மாப்பொருள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாப்பொருள் (starch) என்பது அதிக எண்ணிக்கையில் குளுக்கோசு மூலக்கூறுகள் இணைந்து உருவாகும் ஒருவகை காபோவைதரேட்டு ஆகும். இந்த கூட்டுச்சர்க்கரை எல்லா பச்சைத் தாவரங்களாலும் ஒளியின் முன்னிலையில் காபனீரொக்சைட்டு நீர் இணைந்து உருவாக்கப்பட்டு ஆற்றல் தேவைக்காக சேமிக்கப்படும்.
இதுவே மனிதரின் உணவில் உள்ள பொதுவான காபோவைதரேட்டு வகையாகும். வெவ்வேறு நாட்டு மனிதர்கள் வெவ்வேறு உணவை தமது முக்கிய உணவாகப் பயன்படுத்துவர். கோதுமை, அரிசி, உருளைக்கிழங்கு, சோளம், மரவள்ளி என்பன முக்கிய உணவு வகைகளில் அடங்கும். இவை யாவும் மாப்போருளை தமது முக்கிய கூறாகக் கொண்டனவாகும்.
தூய்மையான மாப்பொருள் வெண்ணிறமான, சுவையற்ற, மணமற்ற பொடியாக இருக்கும். அத்துடன் குளிர் நீரிலோ, அல்ககோலிலோ கரையாது. இது இரு வகையான மூலக்கூறுகளைக் கொண்டது. முதலாவது நேரோட்ட சுருளி வடிவான (linear and helical) அமைலோசு, இரண்டாவது கிளை அமைப்புடைய (branched) அமைலோபெக்ரின். தாவரங்களில் பொதுவாக 20 - 25% அமைலோசும், 75 - 80% அமைலோபெக்ரினும் காண்ப்படும்.[1] விலங்குகளில் சேமிக்கப்படும் குளுக்கோசின் ஒரு தோற்றமான கிளைக்கோசன் இவ்வகை அமைலோபெக்ரினின் மெலதிகமான கிளையுடைய அமைப்பாகும்.
பதனிடப்பட்ட மாப்பொருள் உணவில் பல விதமான சக்கரைப் பதார்த்தங்கள் இருக்கும். சுடுநீர் சேர்க்கப்படும்போது மாப்பொருள் தடிப்படைந்து, இறுக்கமடைந்து ஒட்டும் தன்மையுள்ள பதார்த்தமாக மாறும்.


Remove ads
மேலும் படிக்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads