மாமல்லபுரம் கடல் அருங்காட்சியகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மாமல்லபுரம் கடல் அருங்காட்சியகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரையில் 13.07 ஏக்கர் பரப்பளவில் 2013ம் ஆண்டு தமிழக மீன்வளத்துறையால் பொதுத்துறை, தனியார் மற்றும் அரசு பங்களிப்போடு உலகத் தரம் மிக்க கடல் சார் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நிறுவவிருக்கும் இந்த அருங்காட்சியகத்தில் உலகின் பல்வேறு அறிய மீன்வகைகள் மற்றும் கடல் உயிரினங்கள் காட்சிப்படுத்தப்படும். இது தவிர கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு கடல் வாழ் உயிரினங்களை அதன் வாழ்க்கைச் சூழலில் கண்டுகளிக்கும் வசதியும் இதில் செய்யப்படும் எனவும். இந்த சுரங்கப் பாதையில் செல்லும் போது, கடலின் மணற்திட்டில் நடக்கும் அனுபவத்தை பெறும் வகையில் வடிவமைக்கப்படும் எனவும் மீன்வளத்துறை தெரிவித்தது. மேலும் ரூ. 257.58 கோடி திட்ட மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் கூடிய இத்திட்டத்திற்கு, வடிவமைத்தல், முதலீடு, கட்டி முடித்தல், இயக்குதல் மற்றும் பரிமாற்றம் மற்றும் 33 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் கோரப்பட்டுள்ளது. ஒப்பந்தப்பணிகள் முடிந்ததும் காட்சியகத்திற்காண செயல் திட்டப் பணிகள் துவங்கி மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Remove ads

காட்சியகங்கள்

சுமார் 13.07 ஏக்கர் பரப்பளவில் நிறுவவிருக்கும் கடல் அருங்காட்சியகத்தில் உலகத்தரம் மிக்க காட்சி அரங்குகளை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளனர்.

  • கடல் உயிரினங்களை அருகில் காண 100மீ கடலின் அடியே சுரங்கப்பாதை.
  • 60 நபர்கள் அமரக்கூடிய கடலடியில் உணவகம்.
  • 6 தங்கு அறைகள்.
  • 50 பென்குயின் பறவைகள் அடங்கிய பூங்கா
  • கடல் உயிரினங்கள் ஆராய்ச்சி மையம்
  • 2 பெருவளாகக் கடைகள்
  • 6.5 ஏக்கர் பரப்பளவில் ஒலி மற்றும் ஒளி காட்சி கொண்ட அரியவகை மீன் மற்றும் ஆமை பூங்கா
  • 300 நபர்கள் அமரக்கூடிய பன்னோக்கு காட்சி அரங்கு (நேஷனல் ஜியாகிரபிக் (இந்தியா) மற்றும் டிஸ்கவரி தொலைக்காட்சி ஆகியவற்றோடு இணைந்து செயலாக்கம்)

இது தவிர ஒளி நீரூற்று, இலவச மகிழுந்து பயணம், கலாச்சார உணவகங்கள், மீன் விளையாட்டுக்கள் போன்றவைகளும் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Remove ads

வெளி இணைப்புகள்

கடல் அருங்காட்சியகத்திற்காண ஒப்பந்த விளக்க விளம்பரம் பரணிடப்பட்டது 2016-08-06 at the வந்தவழி இயந்திரம்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads