மாமல்லபுரம் மகிஷாசுரமர்த்தினி சிறிய மண்டபம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாமல்லபுரம் மகிஷாசுரமர்த்தினி சிறிய மண்டபம் என்பது, காஞ்சிபுரம் மாவட்டத்தில், தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள பண்டைத் துறைமுக நகரான மகாபலிபுரத்தில் உள்ள பல குடைவரைக் கோயில்களுள் ஒன்று. இது கடற்கரைக் கோயிலுக்கு வடக்கில் அமைந்துள்ள பாறை ஒன்றில் குடையப்பட்டுள்ளது. மிகவும் சிறியது இக்குடைவரை. இது இராசசிம்ம பல்லவன் காலத்தைச் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது. இக்குடைவரையின் பின் சுவரில் கொற்றவையின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இதில் முழுத்தூண்கள் இல்லை. கீழ்ப்பகுதியில் சிங்க உருவம் கொண்ட இரண்டு அரைத்தூண்கள் மட்டும் காணப்படுகின்றன.[1]
![]() | இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி மகிடாசுரமர்த்தினி மண்டபம், மாமல்லபுரம் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads