மாயனூர் செல்லாண்டியம்மன் கோவில்

கரூர் மாவட்டம் கிருட்டிணராயபுரம் வட்டத்திலுள்ள கோவில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மாயனூர் செல்லாண்டியம்மன் கோவில் என்பது கரூர் மாவட்டம் கிருட்டிணராயபுரம் வட்டத்தில் மாயனூர் எனும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும். இந்தக் கோயில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது.பகுதி மக்களின் ஊர் தெய்வமாகவும், சில இனத்தவர்களின் குலதெய்வமாகவும் செல்லாண்டியம்மன் உள்ளார். இந்தக் கோயில் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

கோவில் அமைப்பு

காவிரியின் தென் கரையில் சுமார் 3.5 ஏக்கர் நிலப்பரப்பளவில் தென்னை, புளி, நாவல், நாகலி்ங்க மரங்கள் சூழ செல்லாண்டியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் தென்புறத்தில் வாய்க்காலும், கீழ்பறத்தில் ஏரிக்கரையும், மேல்புறம் புளியந்தோப்பும் உள்ளன. கோவிலின் முதன்மை வாயில் வடக்குநோக்கி உள்ளது. கோவிலின் முதன்மை வாயில் வடக்குநோக்கி உள்ளது. மூலஸ்தானத்திலிருந்து அருள்பாளிக்கும் அன்னை காவிரி நதியைப் பார்த்தவண்ணம் கொலுவீற்றிருக்கிறாள். கீழ்புற வாசலில் ஆயிரம் வருடம் உள்ள பழமையான அரச மரம் உள்ளது. இங்குள்ள கடம்ப மரத்தடியில் ஈஸ்வரன் எழுந்தருளியிருப்பது சிறப்பம்சம் ஆகும்.

Remove ads

அம்மன் வரலாறு

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆண்டுகொண்டிருந்தபொழுது அவர்களுக்குள் பரிபாலனத் தகராறு எழுந்துள்ளது. அதனைத் தீர்த்து வைப்பதற்கு முயற்சி செய்த செல்லாண்டியம்மன், மூவேந்தர்களுக்குமான எல்லையை வகுத்துக் கொடுத்து, கரையை எல்லையாக அமைத்ததாக வரலாறு அறிய முடிகிறது. நாளடைவில் இக்கரையே மதுக்கரை என அழைக்கப்படுகிறது.

பூஜை முறை

கோவிலுக்குச் சொந்தமான 45 ஏக்கர் நன்செய் நிலத்திலிருந்து வரும் விளைச்சல் வருமானத்தைக் கொண்டு தினந்தோறும் முக்கால பூஜை நடைபெற்று வருகிறது. காலையில் காலசந்தியாக தீப ஆராதனை, மதியம் பொங்கல், பஞ்சாமிர்தம், நெய் அமுது படைத்து, உச்சிகால பூஜை, மாலையில் அமுது படைத்து சாயரட்சை நடைபெறுகிறது. கோவில் கிடாவெட்டுதல், கோழி பழியிடுதல் இருந்தாலும் கோவிலில் படைப்பதில்லை.

திருவிழாக்கள்

ஆடிப்பெருக்கு

ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாளன்று திருவிழா நடைபெறுகிறது. பக்தர்கள் முளைப்பாரி கொண்டு வந்து காவிரியில் விட்டு அம்மனை வழிபடுகின்றனர். கோவில் அறக்கட்டளைச் சார்பில் கரகம் அலங்கரிக்கப்பட்டு வாழைத்தண்டில் வைத்து காவிரியில் விட்டு வணங்குகின்றனர்.

சிவராத்திரி

மாசி மாதம் சிவராத்திரி தொடங்கி மூன்று நாள் திருவிழா தொடங்ககிறது. தினமும் பல்லக்கில் சாமி சாமி கோவிலைச் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றாள்.

நவராத்திரி

புரட்டாசி மாதம் நவராத்திரி ஒன்பது நாட்களும் இரவு உற்சவம் நடக்கின்றது.

அதோடு மட்டுமின்றி வார நாட்களான செவ்வாய், வெள்ளி, ஞாயிறு தினங்களில் அதிகமான நபர்கள் அம்மனின் ஆலத்திற்கு வந்து திருமணங்கள் செய்தல், கிடா வெட்டுதல், காது குத்துதல் முதலிய நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் மூன்று அமாவாசையன்று ஈரத்துணியுடன் அம்மனை வழிபட்டு தொட்டில் கட்டிச் செல்கின்றனர்.

Remove ads

பிற தெய்வங்கள்

இத்திருத்தலத்தில் மதுரைவீரன், காத்தவராயன், கொல்லிமலை பெரியண்ணசாமியாகிய சந்தனக் கருப்பன் ஆகிய பரிகார காவல் தெய்வங்களும், வினாயகரும், கன்னிமார் சுவாமிகளும் உள்ளனர்.

பிற்காலத்தில் மதுரையை ஆண்ட நாயக்கர் வம்சத்து ஆரியராஜா அவரது மனைவி சந்தனத்தம்மாள் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. பேச்சியம்மன் சிலையும் உள்ளது.

பொன்னர், சங்கர் வரலாற்றுத் தொடர்பு:

மூவேந்தர்களால் வழிபடப்பட்டு வந்த இவ்வம்மன் பொன்னர்-சங்கர் அணணன்மார்களின் வழிபாட்டுத் தெய்வமாக திகழ்ந்துள்ளதை அறிய முடிகிறது. எனவே, இப்பகுதியில் உள்ள அம்மன் கோவில் இத்திருத்தலம் பெருமையுடையதாக விளங்குகிறது.

சான்றுகள்:

  • அருள்மிகு பொன்னர்-சங்கர் அண்ணன்மார் வரலாறு, ஆசிரியர்கள் கி.பழனிச்சாமி மற்றும் திருமதி.சாந்தி பழனிச்சாமி, பதிப்பு - ஒன்பதாம் பதிப்பு 2010 திருச்சி டாக்டர் வி.என்.லெட்சுமி நாராயணன் நிறை அறக்கட்டளை வெளியீடு.
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads