மாயவரம் பாப்பா

From Wikipedia, the free encyclopedia

மாயவரம் பாப்பா
Remove ads

மாயவரம் பாப்பா (பிறப்பு: 03 செப்டெம்பர் 1921[1] - இறப்பு 17 ஆகஸ்ட் 2013) என பிரபலமாக அறியப்பட்ட மாயவரம் சரஸ்வதி அம்மாள் வாய்ப்பாட்டு, புல்லாங்குழல் சங்கீத வித்வாம்சினி ஆவார். இவர் 1940 களில் சில திரைப்படங்களில் பாடி நடித்துள்ளார். சிறுவயதிலேயே இசையில் வல்லவராக இருந்ததால் அப்போது மாயவரம் பாப்பா என அழைக்கப்பட்டு, அதுவே பிரபலமான பெயராகிவிட்டது.[2]

Thumb
மாயவரம் பாப்பா என அறியப்பட்ட மாயவரம் சரஸ்வதி அம்மாள்
Remove ads

இளமைக் காலம்

மாயவரம் சரஸ்வதி அம்மாள் ராஜமன்னார்குடி என்ற ஊரில் 1921 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3 ஆம் நாள், ஸ்ரீ் பாலசுப்பிரமணியன், பிரகதாம்பாள் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவர்கள் குடும்பம் ஒரு இசைக் குடும்பம் ஆகும். சரஸ்வதி அம்மாள் தமது ஏழாவது வயதில் புல்லாங்குழல் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். கீரனூர் பக்கத்திலுள்ள பெருஞ்சேரி என்னுமிடத்தில் வாழ்ந்த ஸ்ரீ் முத்து இவரது குருவாக இருந்தார். பின்னர் மாயவரத்துக்குக் குடிபெயர்ந்து அங்கு ஸ்ரீ் வேணுகோபால ஐயர் என்பவரிடம் வாய்ப்பாட்டும், திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளையிடம் புல்லாங்குழலும் கற்றுக் கொண்டார்.[1]

Remove ads

இசைப் பயணம்

மாயவரத்தில் இசைக்கச்சேரிகள் செய்து வந்தபின் சென்னை மயிலாப்பூருக்கு குடிபெயர்ந்து அங்கு சுமார் 20 ஆண்டுகள் மாணவர்களுக்கு வாய்ப்பாட்டு, வீணை, புல்லாங்குழல் ஆகிய இசைப் பயிற்சிகள் அளித்து வந்தார்.[2]

விருதுகள்

  • 2007 - மயிலாப்பூர் தியாகராஜா சங்கீத வித்வத் சமாஜத்தின் "சங்கீத சேவா நிராத்த" விருது.
  • 2011 - விஜய் தொலைக்காட்சியினால் அனைத்துலக பெண்கள் தினத்தையொட்டி "வாழ்நாள் சாதனையாளர்" விருது.
  • 2012 - சங்கீத, நாடக அகாதமியின் "தாகூர் புரஸ்கர்" விருது[3]

நடித்த திரைப்படங்கள்

இறப்பு

மாயவரம் பாப்பா 2013 ஆகஸ்ட் 17 ஆம் நாள், திருவான்மியூரிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 93.[2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads