மாயாசனகப்படலம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மாயாசனகப்படலம் என்பது கம்பராமாயணத்தில் யுத்த காண்டத்திலுள்ள ஒரு படலம். பொய்யான சனகனைப் போல் உருவம் படைத்து சீதையின் முன் நிறுத்தி ராவணனுக்கு இணங்கி போகுமாறு பேசச் செய்கின்ற படலம் ஆகும். கம்பராமாயணத்தில் காணப்படும் இப்படலம் மூல நூலான வால்மீகி இராமாயணத்தில் இல்லை. [1]

இலங்கையின் அசோகவனத்தில் சீதையின் மனத்தை மாற்றுவதற்காக அரக்கர்கள் செய்யும் சூழ்ச்சிகள் பல. அதில் ஒன்று மாயாசனகப்படலம். சீதையின் தந்தையாகிய சனகனைப்போல் ஓர் உருவம் படைத்து சீதையின் முன் நிறுத்தி இராவணனுக்கு இணங்கிப் போகுமாறு கூறுகிறான். சீதையும் தன்னால் தன் தந்தைக்கு துன்பம் நேர்ந்ததே என கலங்குகிறாள். கலங்கினாலும் "இப்படியா உன் மனம் மாறிப் பேச வேண்டும்" என கடிந்து கூறுகிறாள். ஆக இந்த சூழ்ச்சிச் செயல் சீதையிடம் பலிக்கவில்லை என்று கூறுவது மாயாசனகப்படலம் ஆகும்.[2][3][4]

Remove ads

ஆதாரம்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads