மாரியோ பார்க்காசு யோசா

From Wikipedia, the free encyclopedia

மாரியோ பார்க்காசு யோசா
Remove ads

மாரியோ பார்க்காசு யோசா (Mario Vargas Llosa, 28 மார்ச் 1936 - 13 ஏப்ரல் 2025) ஒரு பெருவிய எழுத்தாளரும், அரசியல்வாதியும் இதழாளரும் ஆவார். 2010ம் ஆண்டிற்கான இலக்கிய நோபெல் பரிசினை வென்றவர். யோசா, இலத்தீன் அமெரிக்காவின் (தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவின்) முதன்மையான எழுத்தாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.

விரைவான உண்மைகள் மாரியோ பார்காசு யோசாMario Vargas Llosa, பிறப்பு ...

எசுப்பானிய மொழியில் எழுதும் யோசா 1960களில் நாய்களின் நகரம் எனப் பொருள் படும் எசுப்பானிய மொழிப் புதினம் La ciudad y los perros (ல சியுடாடு இ லொசு பெர்ரொசு) என்பதை 1963 இல் எழுதினார். இது ஆங்கிலத்தில் தி டைம் ஆஃப் தி ஃகீரோ (The Time of the Hero) என அறியப்படுகின்றது. 1965 இல் பச்சை வீடு எனப்பொருள்படும் ல காசா பெர்டே (La Casa Verde, ஆங்கிலத்தில் தி கிரீன் ஃகவுசு The Green House) என்னும் புதினத்தை எழுதினார். பெரு நாட்டின் தனிவல்லாட்சியர் (சர்வாதிகாரி) மானுவேல் ஏ. ஓதிரியா (Manuel A. Odría) என்பாரின் ஆட்சியை அடிப்படையாக கொண்டு 1969 இல் வரைந்த கான்வர்சேசியோன் என் ல கத்தேடரல் (Conversación en la catedral) (ஆங்கிலத்தில் கன்வர்சேசன் இன் தி கத்தீடரல் Conversation in the Cathedral) என்னும் புதினம் போன்ற பற்பல எழுத்துகளின் வழி புகழ் எய்தினார். நகைச்சுவை புதினங்கள், துப்பறியும் புதினங்கள், வரலாற்றுப் புதினங்கள், பரபரப்பூட்டும் அரசியல் புதினங்கள் என பலவகைப்பட்ட புனைவுப் படைப்புகளை எழுதியுள்ளார். இவரது பல படைப்புகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்ட லோசா 1990ம் ஆண்டு பெரு நாட்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1993ம் ஆண்டு எசுப்பானியா நாட்டுக் குடியுரிமையைப் பெற்ற இவர் தற்போது இலண்டன் (ஐக்கிய இராச்சியம்) நகரில் வசித்து வருகிறார்.[1]

Remove ads

இறப்பு

வர்காஸ் லோசா ஏப்ரல் 13, 2025 அன்று லிமாவில் தனது 89 வயதில் இறந்தார், இவரது குடும்பத்தினரால் சூழப்பட்டு "அமைதியுடன்" இருந்தார் என்று அவரது மகன் அல்வாரோ வர்காஸ் லோசா தனது X கணக்கில் கூறியுள்ளார்.[2] இவரது உடல் ஒரு தனிப்பட்ட இறுதிச் சடங்கு விழாவிற்குப் பிறகு தகனம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads