மார்கரெட் சாங்கர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
'மார்கரெட் சாங்கர்(Margaret Sanger, செப்டம்பர் 14, 1879 - செப்டம்பர் 6, 1966) , குழந்தை சமூக சீர்திருத்தவாதி,பாலியல் கல்வியாளர் என பன்முகங்களைக் கொண்ட அமெரிக்கர் . இவர் குடும்பக் கட்டுப்பாட்டிற்கு குரல் கொடுத்தவர்.[1]
Remove ads
பிறப்பும் பணிகளும்
சாங்கர் 1879ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் நாள் அமெரிக்காவின் கார்னிஸ் நகரில் பிறந்தார்.[2] 1896ல் கிளாவராக் கல்லூரியிலும் பின்னர் ஹட்சன் ரிவர் மையத்திலும் பயின்றார். 1900ல் ஒயிட் பிளேய்ன் மருத்துவ மனையில் செவிலியர் படிப்பில் சேர்ந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வில்லியம் சாங்கர் என்பவரை மணந்தார். பின் நியூயார்க் 'சோசியலிசக் கட்சியின் மகளிர் நிர்வாகக் குழுவில்' இணைந்தார்.
சமூக ஈடுபாடு
1912ல் நாளிதழ் ஒன்றைத் தொடங்கி அதன் ஒரு பக்கத்தில் மகளிருக்கான கட்டுரைகளை எழுதினார். 'ஒவ்வொரு சிறுமியும் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?' [3] என்ற அந்தப் பகுதி பிரபலமானபோதும் சிலர் அதை எதிர்த்துக் குரல் கொடுத்தனர். அவர் குடும்பக் கட்டுப்பாடு பற்றி எழுதியபோது பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. குழந்தை பிறப்பை கட்டுப்படுத்துவதற்கு 1873 காம்ஸ்டாக் விதியை சாங்கர் கடுமையாக எதிர்த்தார். 'தங்களுக்கு குழந்தை வேண்டுமா அல்லது வேண்டாமா என்று முடிவு செய்யும் உரிமை பெற்றோர்களுக்குத் தானே தவிர அரசாங்கத்திற்கு அல்ல' என்ற வரிகள் பலராலும் வரவேற்கப்பட்டது. 1921ல் அமெரிக்க பிறப்புக் கட்டுப்பாட்டு அமைப்பை தொடங்கினார். 1923ல் பயிற்சி பெற்ற மருத்துவர்களைக் கொண்டு மேலும் ஒரு புதிய மருத்துவமனையைத் தொடங்கினார். 'பிறப்பு கட்டுப்பாட்டு மருத்துவமனை ஆய்வு அமைப்பு' என்று அழைக்கப்பட்ட அந்த மருத்துவமனைக்குப் பலரும் வரத்தொடங்கினார். இதை தொடர்ந்து 1929ல் பிறப்புக் கட்டுப்பாட்டுக்கு ஆதரவாக தேசிய நிர்வாகக் குழு ஒன்றையும் சாங்கர் உருவாக்கினார். இதன் காரணமாக 1936ம் ஆண்டு காம்ஸ்டாக் விதியிலிருந்து பயிற்சி பெற்ற மருத்துவர்களுக்கு அரசு விலக்கு அளித்தது. இறுதியாக 1965ம் ஆண்டு அமெரிக்க உச்சநீதிமன்றம் 'கருத்தடை' செய்து கொள்ளும் உரிமையைத் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு வழங்கியது.
Remove ads
இறப்பு
சாங்கர் இதய செயலிழப்பு ஏற்பட்டு தனது 86 வது வயதில் 1966ஆம் ஆண்டு செப்டம்பர் 6ம்நாள் டக்ஸன் மருத்துவமனையில் காலமானார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads