மார்க் ராம்பிரகாஷ்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மார்க் ராம்பிரகாஷ் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார்.

ஆரம்பகால வாழ்க்கை

ஹெர்ட்ஃபோர்ட்ஷையரின் புஷேயில் பிறந்தார், இந்தோ-கயனீஸ் மற்றும் ஆங்கில வம்சாவளியைச் சேர்ந்தவர். அவரது தந்தை, பிரித்தானிய கயானாவில் பிறந்தார், இந்தோ-கயானீஸ் மற்றும் அவரது தாய் இங்கிலாந்தினைச் சேர்ந்தவர் ஆவார்.[1][2] அவர் கெய்டன் உயர்நிலைப் பள்ளியிலும் (இப்போது ஹாரோ உயர்நிலைப் பள்ளி), பின்னர் ஹாரோ வெல்ட் சிக்ஸ்த் ஃபார்ம் கல்லூரியிலும் பயின்றார் . அவரது முதல் உள்ளூர் சங்கம் ஹெட்ஸ்டோன் லேனில் உள்ள பெஸ்பரோ துடுப்பாட்ட சங்கம் ஆகும்.அங்கு அவர் தனது மட்டையாட்டத்தில் கவனம் செலுத்துவதற்கு முன்பு விரைவு வீச்சாளராக தனது துடுப்பாட்ட வாழ்க்கையினத் துவங்கினார். அவர் தனது முதல் போட்டியில் 17 வயதில் மிடில்செக்ஸிற்காக விளையாடினார், யார்க்ஷயருக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்கள் எடுத்தார், மற்றும் செல்ம்ஸ்ஃபோர்டில் எசெக்ஸுக்கு எதிரான தனது இரண்டாவது போட்டியில் 71 ஓட்டங்கள் எடுத்தார் (அந்த நேரத்தில் அவர் ஆறாவது கிரேடு மாணவராக இருந்தார்). 1989 ஆம் ஆண்டில் யார்க்ஷயருக்கு எதிராக ஹெடிங்லேயில் தனது முதல் முதல் ஹரத் துடுப்பட்ட நூறு ஓட்டங்களை எடுத்தார். மேலும் இங்கிலாந்து U-19 அணியின் தலைவராக இருந்தார் . அவர் தனது 18 வயதில், 1988 ஆம் ஆண்டு நாட்வெஸ்ட் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்றபோது பரவலாக அறியப்பட்டார். இவர் 56 ஓட்டங்கள் எடுத்தது மிடில்செக்ஸ் வொர்செஸ்டர்ஷையரை வீழ்த்த உதவியது.

Remove ads

துடுப்பாட்ட வாழ்க்கை

2006 ஆம் ஆண்டில், ராம்பிரகாஷ் மற்றும் கரேன் ஹார்டி பிபிசியின் ஸ்ட்ரிக்ட்லி கம் டான்ச் பட்டத்தினை வென்றனர்,[3] இங்கிலாந்தின் முன்னாள் ரக்பி வீரர் மாட் டாசன் மற்றும் இறுதிப் போட்டியில் லிலியா கோபிலோவா ஆகியோரை வீழ்த்தினர். முன்னாள் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் டேரன் கோபைத் தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியை தொடர்ச்சியாக வென்ற இரண்டாவது துடுப்பாட்ட வீரர் ராம்பிரகாஷ் ஆவார். 14 மார்ச் 2008 அன்று விளையாட்டு நிவாரணத்திற்கான ஸ்ட்ரிக்ட்லி கம் டான்சிங்கின் சிறப்பு பதிப்பில், சாம்பா நடனத்தினை நிகழ்த்திய பின்னர் ராம்பிரகாஷ் மற்றும் கூட்டாளர் காரா டொயின்டன் ஆகியோர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். 2008 ஆம் ஆண்டில், தி வீக்கஸ்ட் லிங்கின் சிறப்பு ஸ்ட்ரிக்ட்லி கம் டான்சிங் எபிசோடில் தோன்றினார்.

ராம்பிரகாஷ் , புக்ஸ் ஆஃப் வாட்ஃபோர்டு எஃப்சியின் பள்ளி மாணவனாக இருந்தார், ஆனால் துடுப்பட்டத்தில் கவனம் செலுத்துவதற்காக கற்றலை கைவிட்டார். 2003 ஆம் ஆண்டில் நார்த்வூட் செயின்ட் மார்ட்டின் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருந்த அவர், துடுப்பாட்டத்தினைத் தவிர்த்து ஒரு குறுகிய காலத்திற்கு கால்பந்து கற்பித்தார். அவர் ஆர்சனல் கால்பந்து கழக ஆதரவாளராக உள்ளார் மற்றும் அர்செனல் எக்ஸ்-ப்ரோஸ் மற்றும் பிரபலங்களின் அணி சார்பாக விளையாடுகிறார்.[4]

மார்ச் 9, 2008 அன்று, சிபிபிசி நிகழ்ச்சியான ஹைடர் இன் தி ஹவுஸில் ராம்பிரகாஷ் தோன்றினார், அப்பா இயன் ஸ்மீட்டன், இயானின் மனைவி வெண்டி, இரண்டு குழந்தைகள் வில் மற்றும் பிப்பா ஸ்மீட்டன் மற்றும் கேம்பிரிட்ஜில் அவர்களது நண்பர் டக்கி ஆகியோருடன். அவர் தனது அனைத்து சவால்களையும் நிறைவு செய்தார்.

Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads