மார்த்தாண்ட வர்மா (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மார்த்தாண்ட வர்மா என்பது சி. வி. இராமன் பிள்ளையின் இதே தலைப்பிலான வரலாற்றுப் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு பி.வி.ராவு இயக்கி 1933-ல் வெளியான ஒரு பேசாத கருப்பு வெள்ளை மலையாளத் திரைப்படமாகும். மலையாளத் திரைப்படத் துறையில் வெளியான இரண்டாவது படம் மற்றும் ஒரு இலக்கியப் படைப்பை அடிப்படையாகக் கொண்ட முதல் திரைப்படம் இது[1][2].
Remove ads
கதைப் பின்னல்
சி. வி. இராமன் பிள்ளையின் மார்த்தாண்ட வர்மா நாவலை அடிப்படையாகக் கொண்ட கதை.[1][2][3]
நடிப்பு
இத் திரைப்படத்தில் நடித்தவர்கள்[4]:
- செய்தேவ் - மார்த்தாண்ட வர்மா
- எ.வி.பி மேனன் - அனந்த பத்மநாபன்
- வி. நாயிக் - பத்மநாபன் தம்பி
- பத்மினி - பாறுக் குட்டி
- தேவகி
- வி. சி. குட்டி
- எச். வி. நாத்
- சுந்தரம் ஐயர்
வெளியீடு
இந்தத் திரைப்படம் வெளியிட்டபோது அக் காலகட்டத்தில் நாவலின் பதிப்பாளர் கமலாலயா புக் டிப்போவுடன் காப்புரிமை பிரச்சனையில்[2] சிக்கி முதல் காட்சிக்குப் பிறகு இத்திரைப்படம் பின்வாங்கப்பட்டு கேரள திரைப்படத்துறையில் மற்றும் இலக்கிய பதிப்பகத் துறையில் முதலாவது[3] காப்புரிமை வழக்கைப் பதிந்தது.
இத் திரைப்படத்தின் ஒரு பதிப்பு புனேயிலுள்ள தேசிய திரைப்பட ஆவணக்காப்பக மையத்தில் பத்திரப்படுத்தப்பட்டிருக்கிறது [5].
தென்னிந்தியாவில் வெளியான பேசாத கருப்பு வெள்ளை திரைப்படங்களில் இத்திரைப்படம் மட்டுமே பாதுகாக்கப்படும் பெருமையைப் பெற்றுள்ளது.[6]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads