மார்பகத்தொய்வு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெண் முலைத் தொய்வு (ptosis) அல்லது மார்கத் தொய்வு என்பது இயற்கையாக முதுமையடைவதால் ஏற்படும் நிகழ்வாகும். ஒரு பெண்ணின் மார்பகம் எத்தனை விரைவாக தொய்வடைகின்றது என்பதும் தொய்வின் அளவும் பலகாரணிகளைச் சார்ந்துள்ளது. புகை பிடித்தல், கருத்தரிப்பு எண்ணிக்கை, ஈர்ப்பு விசை, உயர் உடல் நிறை குறியீட்டெண், பெரிய மார்புக்கச்சை அளவு, குறிப்பிடத்தக்க எடை கூடல் அல்லது இழப்பு ஆகியன முலைத்தொய்வை பாதிக்கக்கூடியவை.[1] மாதவிடாய் நின்ற பெண்களுக்கு அவர்களது தோலின் நெகிழ்வு குறைவதால் கூடுதல் தொய்வு ஏற்படும். பல பெண்களும் மருத்துவர்களும் தாய்ப்பாலூட்டுவதால் தொய்வு ஏற்படுவதாக தவறாக எண்ணுகின்றனர். தவிரவும் மார்புக்கச்சை அணிவதால் தொய்வு ஏற்படுவதைத் தடுக்கலாம் உனவும் தவறான கருத்து நிலவுகின்றது.[2]
வடிவமைப்பறுவையாளர்கள் முலைத்தொய்வின் தீவிரத்தை முலையடி மடிப்பிலிருந்து முலைக்காம்புள்ள இடத்தைப் பொறுத்து வகைப்படுத்துகின்றனர். மிகவும் மோசமான நிலையில் முலைக்காம்புகள் மடிப்பிற்குக் கீழே தரையை நோக்கி இருக்கும்.
Remove ads
மேற்சான்றுகள்
கூடுதல் தகவல்களுக்கு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads