மாலிப்டினம் நாற்குளோரைடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாலிப்டினம் நாற்குளோரைடு (Molybdenum tetrachloride) என்பது MoCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம், பல்பகுதிய ("α") அமைப்பு , அறுபகுதிய ("β") அமைப்பு ஆகிய இரண்டு பல்லுருவ அமைப்புகளில் காணப்படுகிறது. ஆயினும், எந்த அமைப்பிலும் இச்சேர்மம் தாழ்நிலையை அடையாமல் எந்தக் கரைப்பானிலும் கரைவதில்லை. ஒவ்வொரு பல்லுருவ அமைப்பிலும், இரண்டு விளிம்புநிலை குளோரைடு ஈனிகள் மற்றும் நான்கு இரட்டைப்பால ஈனிகளுடன் மாலிப்டின மையங்கள் எண்முகவடிவில் இணைந்துள்ளன[1].

மாலிப்டினம் பெண்டாகுளோரைடை டெட்ராகுளோரோயீத்தீனைப் பயன்படுத்தி குளோரின் நீக்கம் செய்து மாலிப்டினம் நாற்குளோரைடு தயாரிக்கப்படுகிறது:[2]
- 2 MoCl5 + C2Cl4 → 2 MoCl4 + C2Cl6.
இச்சேர்மத்தின் பல்திறன் வாய்ந்த அசிட்டோநைட்ரைல் கூட்டு விளைபொருளானது ஐங்குளோரைடில் இருந்து நேரடியாகத் தயாரிக்கப்படுகிறது:[3]
- 2 MoCl5 + 5 CH3CN → 2 MoCl4(CH3CN)2 + ClCH2CN + HCl
MeCN ஈனிகளால் பிற ஈனிகளுடன் பரிமாற்றம் அடைய முடியும்.
- MoCl4(CH3CN)2 + 2 THF → MoCl4(THF)2 + 2 CH3CN
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
