மாலிப்டைட்டு

ஆக்சைடு கனிமம் From Wikipedia, the free encyclopedia

மாலிப்டைட்டு
Remove ads

மாலிப்டைட்டு (Molybdite) என்பது மாலிப்டினம் டிரையாக்சைடின் இயற்கையாகத் தோன்றும் ஒரு வடிவமாகும். இது MoO3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. மஞ்சளும் பச்சையும் கலந்த நிறத்தில் செஞ்சாய்சதுரப் படிகத்திட்டத்தில் ஊசிவடிவ படிகங்களாகக் காணப்படுகிறது.

விரைவான உண்மைகள் மாலிப்டைட்டுMolybdite, பொதுவானாவை ...

1854 ஆம் ஆண்டு மாலிப்டைட்டு முதன்முதலில் கண்டறியப்பட்டது. செக் குடியரசின் [3] வடமேற்குப் பகுதியிலுள்ள குருப்கா நகரத்தின் நோட்டல் பகுதியில் குவார்ட்சு படிகத்தின் நாளங்களிலும். பொகிமியா நிலப்பகுதியின் உசுதி மண்டலத்தில் காணப்படும் குருசுனே ஓரி மலைகளிலும் மாலிப்டைட்டு காணப்படுகிறது. மாலிப்டினைட்டு நாளக் குழிகள், தாது நாளங்களின் மீது ஒரு மேற்பூச்சாகவும், குவார்ட்சு, டோப்பாசு எனப்படும் புட்பராகத் தாது, கிரெய்சன்சு எனப்படும் பாறை வகை நாளங்களிலும் இது காணப்படுகிறது. மாலிப்டினைட்டு, பெட்பாக்தலைட்டு மற்றும் குவார்ட்சு போன்றவை மாலிப்டைட்டுடன் சேர்ந்து காணப்படும் பிற கனிமங்களாகும். பெரிமாலிப்டைட்டு என்ற இரும்பு மாலிப்டைட்டு கனிமம் பெரும்பாலும் தவறுதலாக மாலிடைட்டு எனப் புரிந்துகொள்ளப்படுகிறது[2] The similar mineral ferrimolybdite is often misidentified as molybdite.[2].

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads