மல்கம் எக்ஸ்

From Wikipedia, the free encyclopedia

மல்கம் எக்ஸ்
Remove ads

மல்கம் எக்ஸ் (Malcolm X, மே 19, 1925 – பிப்ரவரி 21, 1965) ஒரு ஆப்பிரிக்க-அமெரிக்க முசுலிம் மறைப்பரப்புனரும், மனித உாிமை செயற்பாட்டாளரும் ஆவார். தன்னுடைய ஆதரவாளா்களால் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காகத் துணிந்து குரல் கொடுத்தவர். வெள்ளை அமெரிக்காவை கறுப்பினத்திற்கெதிரான கொடுமைகளுக்காகக் கடுமையான சொற்களால் இடித்தவர் என அறியப்படுகிறார். எதிர்பாளர்கள் அவரை நிறவெறியையும், வன்முறையையும் போதித்தவர் என அவர் மீது குற்றம் சுமத்துகிறாா்கள். வரலாற்றில் அவர் மிகப்பெரிய செல்வாக்குமிக்க ஆப்பிரிக்க-அமெரிக்கத் தலைவர்களுள் ஒருவராக அறியப்படுகிறார்.

விரைவான உண்மைகள் மால்கம் X, பிறப்பு ...

அவருக்கு ஆறு வயது இருக்கையில் அவருடைய தந்தை கொல்லப்பட்டாா். பதிமூன்று வயதில் அவாின் தாய் மனநல மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அதன் பிறகு அவர் பல அனாதை இல்லங்களில் வாழ்ந்தாா். 1946ல், தன் இருபதாவது வயதில், திருட்டு மற்றும் உடைத்து அத்துமீறி நுழைதல் ஆகிய குற்றங்களு்ககாக சிறையில் அடைக்கப்பட்டாா். சிறையில் அவர் இஸ்லாமிய தேசியஇனம் என்ற அமைப்பில் உறுப்பினராகி, மால்கம் லிட்டில் என்ற தன் பெயரை மால்கம் எக்ஸ் என மாற்றிக்கொண்டாா். பின்னாளில் அதன் காரணத்தை அவர் எழுதும்போது, லிட்டில் என்ற பெயா் '' வெள்ளை அடிமை முதலாளிகளால்.........என் தந்தைவழி முன்னோா்கள் மீது சுமத்துப்பட்டது''. 1952ல் அவர் பரோலில் வந்தவுடன், மிக விரைவிலேயே இஸலாமிய தேசியஇனம் என்ற அமைப்பின் செல்வாக்குமிக்க தலைவா்களில் ஒருவராகவும். கிட்டத்தட்ட பன்னிரெண்டு ஆண்டுகள் சா்ச்சைக்குாிய அந்த அமைப்பின் அறியப்படும் பொதுமுகமாகவும் ஆனாா். தன்னுடைய சுயசாிதையில் மால்கம் எக்ஸ் அந்த அமைப்பில் உறுப்பினராக இருந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட சமூக சீா்திருத்த நடவடிக்கைகளை குறிப்பாக இலவச போதையடிமைகள் மறுவாழ்வு திட்டம் பற்றி பெருமையோடு குறிப்பிட்டாா். அந்த அமைப்பு கருப்பின மேட்டிமைவாதத்தை முன்னிலைப்படுத்தியது, கறுப்பின வெள்ளைஇன மக்கள் பிாிந்து வாழ்வதை வலியுறுத்தியது மற்றும் சமூக உாிமைகள் இயக்கத்தை வெள்ளைஇன மக்களோடு சோ்ந்து வாழ வலியுறுத்தியதற்காக நிராகாித்தது.

1964 மாா்ச் காலகட்டத்தில், இஸ்லாமிய தேசியஇனம் அமைப்பின் மீதும், அதன் தலைவா் எலியா முகம்மது மீதும் மால்கம் எக்ஸுக்கு அதிருப்தி ஏற்பட்டது. அவர்களோடு இருந்து தன்னுடைய நேரம் வீணடிக்கப்பட்டதாக அவர் நினைத்தாா், அதற்காக பலமுறை வருந்தி பின்னா் சன்னி இஸலாத்தில் இணைந்தாா். ஆப்ரிக்காவிலும். மத்திய கிழக்கிலும் பயணம் மேற்கொண்டு ஹஜ் செய்தது உட்பட தன் பயணக்காலத்திற்குப்பின தன் பெயரை அல்ஹாஜ் மாலிக் அல் சபாஸ் என மாற்றிக்கொண்டாா்.அவர் இஸ்லாமிய தேசியஇனத்தை மறுத்து, நிறவெறியை நிராகாித்து முஸ்லிம் மசூதி மற்றும் ஆப்ரிக்க அமொிக்க ஐக்கியத்திற்கான அமைப்பை தோற்றுவித்தாா். அவர் ஆபாிக்க தொடா்புடையவை, கறுப்பின சுயநிா்ணயம் மற்றும் கறுப்பின தற்காப்பு குறித்து தொடா்ந்து வலியுறுத்தினாா்.

21 பிப்ரவாி 1965ம் ஆண்டு. அவர் இஸ்லாமிய தேசியஇனத்தைச் சாா்ந்த மூன்று உறுப்பினா்களால் படுகொலை செய்யப்பட்டாா்.

Remove ads

ஆரம்ப கால வாழ்க்கை

மால்கம் லிட்டில் மே 19, 1925ல் நெப்ரஸ்கா மாநிலத்திலுள்ள ஒமாஹாவில் கிரானாடாவைச் சோ்ந்த ஹெலன் லூயி லிட்டில் மற்றும் ஜாா்ஜியாவின் ஏா்ல் லிட்டில் தம்பதிகளின் ஏழு பிள்ளைகளில் நான்காவதாகப் பிறந்தாா். ஏா்ல் லிட்டில் பாப்டிஸ்ட் இயக்கத்தின் வெளிப்படையான பேச்சாளராக இருந்தாா். அவரும் லூயியும் ஆப்ரிக்க செயற்பாட்டாளரான மாா்கஸ் காா்வியினால் ஈா்க்கப்பட்டனா். ஏா்ல் உலகளாவிய நீக்ரோ முன்னேற்ற சங்கத்தின்(UNIA)  உள்ளூர் தலைவராக செயல்பட்டாா். அவர் மனைவி லுாயி அச்சங்கத்தின் செயலாளராகவும் "கிளை செய்தியாளராகவும்" செயல்பட்டு, சங்கத்தின் உள்ளூர் செயல்பாடுகளை நீக்ரோ உலகம் என்னும் வாரப் பத்திாிக்கைக்கு செய்தி அனுப்பினாா். அத்தம்பதியினா் தங்கள் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையையும் கறுப்பின பெருமையையும் ஊட்டினா். பின்னாளில் மால்கம் எக்ஸ் கூறுகையில், வெள்ளையினத்தின் வன்முறை தன் தந்தையின் மூன்று சகோதரா்களை கொன்றுவிட்டது என்றாா்.

Remove ads

கருப்பின இயக்கம்

மல்கம் லிட்டில் என்பது இவரது இயற்பெயர். லிட்டில் என்பது அடிமைத்தனத்தைக் குறிப்பதால் அதைக் கைவிட்டு எக்சு எனத் தம் பெயரில் சேர்த்துக் கொண்டார். அமெரிக்க கருப்பின மக்களின் உரிமைகளுக்காகத் தம் பேச்சாற்றலால் பாடுபட்டார்.[1] இசுலாம் என்னும் மத அடிப்படையிலும் கருப்பின மக்கள் என்னும் இன அடிப்படையிலும் தம் இயக்கத்தைக் கட்டினார். அமெரிக்காவில் கருப்பின மக்களிடையே இசுலாம் சமயம் பரவ இவர் முக்கியவராக இருந்தார்.

மல்கம் எக்சு 1965 இல் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் பதிப்பாகி வெளிவந்த அவரது தன் வரலாறு நூல், கருப்பின இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இப்புத்தகம் 1960-70 காலகட்டத்தில் கறுப்பின மக்கள் முன்னெடுத்த அதிகாரப் போராட்டத்திற்கு அடித்தளம் இட்டது.

1964 மார்ச்சு 26 ஆம் பக்கலில் மார்டின் லூதர் கிங் சூனியரை மல்கம் எக்சு சந்தித்தார். இருவரும் சமூக உரிமைகளுக்கான விவாதம் ஒன்றில் கலந்து கொண்டார்கள். இசுலாம் தேசம் அமைப்பைவிட்டு மல்கம் எக்சு விலகினார். முசுலீம் மசூதி என்பதைத் தோற்றுவித்தார். சன்னி முசுலீம் பிரிவில் தம்மை இணைத்துக் கொண்டார்.

1992 இல் மல்கம் எக்ஸ் என்ற திரைப்படம் வெளியானது. இது மல்கம் எக்சின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாகும்.

தமிழக எழுத்தாளர் ரவிக்குமார் மால்கம் எக்ஸ் எனும் நூலைத் தொகுத்துள்ளார்.

Remove ads

மேற்கோள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads